வடக்கில் புதிய குடியேற்றங்களை ஏற்படுத்தும் எந்த தேவையுமில்லை -
கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
வடக்கில் உள்ள போர் வெற்றி சின்னங்கள் விக்னேஸ்வரனுக்கு மட்டுமே பிரச்சினையாக இருக்கின்றது. மக்களுக்கு அவை தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை. சுதந்திரமாக பிரச்சினைகள் இன்றி வாழும் தேவை மட்டுமே வடக்கு மக்களுக்கு இருக்கின்றது.
வீடுகள், காணி, தொழில் போன்ற பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் புதிய குடியேற்றங்களை ஏற்படுத்தும் எந்த தேவையுமில்லை -
Reviewed by Author
on
August 30, 2018
Rating:

No comments:
Post a Comment