தாயக எழுச்சிப்பாடல்களை தந்த யாழ் ரமணன் என்னும் ஒப்பற்ற கலைஞன் காலமானார்....
யாழ் ரமணன் என்னும் ஒப்பற்ற மனிதநேயமிக்க கலைஞன் காலமானார் என்னும் செய்தி மிகுந்த துயரை தருகிறது . இசைக்காக வாழ்ந்து இசையோடு இணைந்து இறுதிவரை இசைக்காக வாழ்ந்த அந்த பெரும் கலைஞன் எங்கள் மண்ணுக்கு ஆற்றிய பணிகள் அளப்பெரியவை .
மனத்தால் திடம் மிக்க ஒரு மனிதனாய் தன் இயலாமைகளைக்கூட ஒருபோதும் எண்ணாமல் மன ஓர்மத்தால் இறுதிவரை வாழ்ந்த பெரும் கலைஞன் .
தாயக இசை வரலாற்றில் ராஜன் இசைக்குழு என்னும் தனித்துவம் மிக்க இசைக்குழுவின் பிதாமகராய் இறுதிவரை ஒரு பாரம்பரியத்தை உருவாக்கியவர் . குறிப்பாக ராஜன்ஸ் இசைக்குழுவின் அந்த ஆரம்ப இசையில் ரமணன் அண்ணையின் கைவிரல்கள் கிட்டார் மீது புரியும் நர்த்தனங்களை சிறுவயது முதல் ரசிக்கும் லட்ஷபேர்களில் நானும் ஒருவன் .
தமிழர் பிரதேசங்களில் மாத்திரமன்றி தலைநகர் உள்ளிட்ட பல இடங்களிலும் அவருக்கென்று ஒரு தனிவரலாறு உண்டு .
குறிப்பாக எங்கள் போர்க்கால இசை என்னும் தளத்தில் அவரது தேசிய பாடல்களுக்கென்று ஒரு தனித்துவம் இருக்கின்றது.
அனைவராலும் விரும்பப்பட்டு கேட்டிருந்த பல பாடல்கள் உண்டு.தானே இயற்றிக் கூட பாடல்கள் பலவற்றினை தந்து தாயக விடுதலைப்போரில் இசையின் மூலம் அவரது பங்கு அளப்பரியது .
இற்றைவரை மிகச்சிறப்பான பாடல்களாக விரும்பப்படும் ரமணன் அண்ணாவின் இசையிலமைந்த
என இப்படி பல தாயக எழுச்சிப் பாடல்களை தந்த ஒப்பற்ற பல் இசை வாத்திய கலைஞன் .
அடுத்து தாயக பக்தி கானங்களை பொறுத்தவரை பல ஆலயங்களுக்கான
பக்தி பாடல்களையும் தன் இசைமூலம் இந்த உலகிற்கு தந்தவர் . குறிப்பாக திருச்செந்தூரின் கரையோரத்தில் என்னும் பாடலை அதே மெட்டில் வைத்து எங்கள் ஈழ மண்ணின் அடையாளக் குரல்களான சாந்தன் சுகுமார் ஆகியோரை வைத்து மூளாய் ஊரின் வந்திராபுளோவில் என்று தொடங்கும் பலரின் விருப்பை பெற்ற முயற்சியாய் அது கருதப்பட்ட்து.
இன்னும் பல சிறப்புக்கள் உள்ள ஒப்பற்ற ஒரு கலைஞன் இரண்டொரு நாழிகைளாளுக்கு முன்னர் அவரின் பிறந்தநாளில் வாழ்த்தினை பதிந்த ஈரம்கூட காயமுன்னர் அஞ்சலிப் பதிவை எழுத்தாக கூடிய கலிகாலம் மனதில் வேதனையை தருகிறது. மூத்த கலைஞராய் வாழ்ந்து விழிமூடிய ரமணன் அண்ணைக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

- முல்லைமண் எங்களின் வசமாச்சு ..
- மாவீரர் யாரோ என்றால் மரணத்தை ..
- ஆடிபாடுவோம் கூடிபாடுவோம் ..
என இப்படி பல தாயக எழுச்சிப் பாடல்களை தந்த ஒப்பற்ற பல் இசை வாத்திய கலைஞன் .
அடுத்து தாயக பக்தி கானங்களை பொறுத்தவரை பல ஆலயங்களுக்கான
பக்தி பாடல்களையும் தன் இசைமூலம் இந்த உலகிற்கு தந்தவர் . குறிப்பாக திருச்செந்தூரின் கரையோரத்தில் என்னும் பாடலை அதே மெட்டில் வைத்து எங்கள் ஈழ மண்ணின் அடையாளக் குரல்களான சாந்தன் சுகுமார் ஆகியோரை வைத்து மூளாய் ஊரின் வந்திராபுளோவில் என்று தொடங்கும் பலரின் விருப்பை பெற்ற முயற்சியாய் அது கருதப்பட்ட்து.
இன்னும் பல சிறப்புக்கள் உள்ள ஒப்பற்ற ஒரு கலைஞன் இரண்டொரு நாழிகைளாளுக்கு முன்னர் அவரின் பிறந்தநாளில் வாழ்த்தினை பதிந்த ஈரம்கூட காயமுன்னர் அஞ்சலிப் பதிவை எழுத்தாக கூடிய கலிகாலம் மனதில் வேதனையை தருகிறது. மூத்த கலைஞராய் வாழ்ந்து விழிமூடிய ரமணன் அண்ணைக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
தாயக எழுச்சிப்பாடல்களை தந்த யாழ் ரமணன் என்னும் ஒப்பற்ற கலைஞன் காலமானார்....
Reviewed by Author
on
August 10, 2018
Rating:

No comments:
Post a Comment