இந்த சோகத்திலும் ஸ்டாலின் செய்த பேருதவி:
கேரளாவில் தொடர் கனமழையின் காரணமாக 22 அணைகள் நிரம்பி அதன் உபரி நீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது. சமீபமாக இடுக்கி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் சிறுதொணி நதியில் சேர்ந்து வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி இதுவரை 37 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் 150க்கும் அதிகமானோர் வெள்ளத்தில் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 28 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ள பாதிப்புகளுக்கு திமுக சார்பாக ரூ. 1 கோடி உதவி அளிக்கப்படும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கின் காரணமாகப் பேரழிவு ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடிழந்து, இடப் பெயர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்திருக்கின்றன. பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் மக்களுக்கு ஆதரவு அளித்திடும் நோக்கில், திமுக அறக்கட்டளை சார்பாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாயை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
இப்பெருவெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிப்புக்கு ஆளாகி இருப்போருக்கு ஆறுதலையும் திமுக தெரிவித்துக் கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிதியானது கேரளா முதல்வரின் அவசர நிதியுதவி பிரிவிற்கு அனுப்பப்படுகிறது. திமுக தலைவரும் தனது தந்தையுமான கருணாநிதி மறைந்த சோகத்தில் இருக்கும் முக ஸ்டாலின்,
இந்த துக்கத்திலும் பக்கத்து மாநில மக்கள் மழை வெள்ளத்தால் அவதி பட்டிருக்கும் இந்த நேரத்தில் ஒரு கோடிரூபாய் நிதி அளித்த இந்த செயல் கேரள மக்களை மட்டுமல்ல தமிழக மக்களையும் நெகிழ வைத்துள்ளது.
இந்த சோகத்திலும் ஸ்டாலின் செய்த பேருதவி:
Reviewed by Author
on
August 13, 2018
Rating:

No comments:
Post a Comment