விநாயகர் சதுர்த்தி பூஜையில் வைக்க வேண்டிய 21 வகை இலைகள் .....
உங்களுடைய அற்புதத் தாவரமான அருகம்புல்லையும் காட்டுப் பூவான எருக்கம் பூக்களையும் கூட அவர் ஏற்றுக் கொள்கிறார். எதையுமே பக்தர்களிடம் இருந்து அவர்கள் மறுப்பதே இல்லை. அதனால் மிக எளிமையாகவே விநாயகரை வழிபடலாம்.
நீங்கள் நன்கு உற்று கவனித்தால் பிள்ளையாருக்கு படைக்கப்படும் பொருள்கள் மிகவும் எளிமையானதாகவே இருக்கும். பெரிதாக நீங்கள் சிரமப்படவே தேவையிருக்காது.
வீட்டுப் பூஜை பெரும்பாலும் விநாயகர் சதுர்த்தி அன்று எல்லாருடைய வீடுகளிலும் விநாயகர் உருவ சிலை தங்களால் முடிந்ததை வைத்து வழிபடுவோம்.
அது வெறுமனே களிமண் சிலையாகவோ, அதுவும் இயலாதவர்கள் வெறுமனே வீட்டில் உள்ள மஞ்சள் பொடியில் கைகளால் பிள்ளையார் பிடித்து வைத்தோ வழிபடுவது உண்டு. அலங்காரம் அப்படி ஒரு பிள்ளையாருக்கு சின்ன சின்ன கலர் பொம்மை குடைகள் வாங்கி வந்து, எருக்கம்பூ அணிவித்து அருகம்புல் சாத்தி, செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வார்கள். படையல் படையல் வைப்பது மிக மிக முக்கியம். வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருப்பது பிள்ளையாருக்கு வைக்கும் படையலைத் தான். அதில் என்னென்ன வைப்பார்கள் தெரியுமா?
கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என அத்தனையும் வேத்தியமாக வைக்கப்படும். அதேபோல் பழங்களில் ஆப்பிள் திராட்சைநாவல் பழம், முக்கியமாக விளாம்பழம் கட்டாயம் இருக்கும். வாழைப்பழம், தேங்காய் வழக்கம் போல் வைக்கப்படும். அவ்வை பாட்டு பிள்ளையாருக்கு வணக்கம் செலுத்துதல் என்றாலே விநாயகரே வினை தீர்ப்பவனே பாடலும் அவ்வையாரின் பாலும் தெளிதேனும் பாடல் தான் நம்முடைய நினைவுக்கு வரும். பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன். துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா என்று பாடி வழிபடலாம்.
மறுநாள் புனர்பூஜை என்று அழைக்கப்படுகிற சிறிய அளவிலான பூஜையை செய்து, நல்ல நேரம் பார்த்து பிள்ளையார் சிலையை கிணற்றிலோ குளம், ஆறு, கடல் எதுவாக இருந்தாலும் அதில் போட்டு கரைத்துவிடலாம். இப்படித்தான் உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
ஆடம்பரம் என்பது அவரவர் பொருளாதார நிலையைப் பொருத்தது.
21 வகை பச்சிலைகள் விநாயகர் சதுர்த்தியன்று அவருக்கு இஷ்டமான 21 வகை யான பச்சிலைகளை வைத்து பூஜை செய்தால் இன்னும் விசேஷம். எவ்வளவு பலகாரங்கள், பழங்கள் என ஆடம்பரமாக வைத்தாலும் வைக்காவிட்டாலும் இந்த 21 இலைகள் வைத்து வழிபட்டால் நினைத்தது அத்தனையும் நிறைவேறும். அந்த
21 வகைகள் என்னென்ன, அவற்றின் பலன்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
1. முல்லை இலை - வீட்டில்அறம் வளரும்.
2. கரிசலாங்கண்ணி - வாழ்க்கைக்குத் தேவையான பொன்னும் பொருளும் வந்து சேரும்.
3. வில்வ இலை - இன்பமும் நீங்கள் மனதில் விருமு்பியவை அனைத்தும் கிடைக்கும்.
4. அருகம்புல் - அனைத்துவிதமான சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
5. இலந்தை இலை - கல்வியில் பிள்ளைகளுக்கு மேன்மை உண்டாகும்.
6. ஊமத்தை இலை - தாராள மனம் பெருகும்
7. வன்னி இலை - இந்த ஜென்மத்திலும் சொர்க்கத்திலும் கூட மகிழ்ச்சி உண்டாகும்.
8. நாயுருவி இலை - முகத்தில் பொலிவும் உங்களுடைய உடல் உள்ள அழகும் கூடும்.
9. கண்டங்கத்தரி இலை - மன தைரியமும் வீரமும் அதிகரிக்கும்.
10. அரளி இலை - எடுக்கின்ற எல்லா முயற்சியும் கைகூடி வரும்.
11. எருக்கம் இலை - கருவில் உண்டாகும் குழந்தைக்கு பாதுகாப்பு தரும்.
12. மருத இலைகள் - மகப்பேறு செல்வம் கிடைக்கும்.
13. விஷ்ணுகிராந்தி இலை - நுண்ணறிவு பெருகும்.
14. மாதுளை இலை - பெரும் புகழும் நல்ல பெயரும் கிடைக்கும்.
15. தேவதாரு இலை - எதையும் தாங்குகின்ற மன தைரியம் கிடைக்கும்.
16. மரிக்கொழுந்து இலை - இல்லற சுகம் அதிகமாகக் கிடைக்கப்பெறும்.
17. அரச இலை - உயர் பதவியும் அந்த பதவியின் மூலம் வெற்றியும் கிடைக்கும்.
18. ஜாதிமல்லி இலை - சொந்த வீடு, மனை பாக்கியம் கிடைக்கும்.
19. தாழம்பூ இலை - செல்வச் செழிப்பு உண்டாகும்.
20. அகத்தி இலை - கடன் தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும்.
21. அருகம்புல் மாலை அர்ச்சனை இந்த எல்லாவற்றையும் விடவும் புனிதமாகவும் விசேஷமானதாகவும் இருக்கும்.
விநாயகர் சதுர்த்தி பூஜையில் வைக்க வேண்டிய 21 வகை இலைகள் .....
 Reviewed by Author
        on 
        
September 13, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
September 13, 2018
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
September 13, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
September 13, 2018
 
        Rating: 

 
 
 

 
.jpg) 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment