கிளிநொச்சியில் தியாகி திலீபனின் 31ம் ஆண்டு நினைவு அனுஷ்டிப்பு -
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சியில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு
தியாகி திலீபன் அவர்களின் 31ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சியில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு ஆனந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, தியாகி திலீபனுக்கு மலர் வணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கந்தசுவாமி ஆலய முன்றலில் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு
கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலய முன்றலில் தியாகி திலீபனின் 31ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை 8 மணியளவில் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வு திலீபன் உயிர் நீத்த நேரமான 10.48 மணியளவில் அஞ்சலியுடன் நிறைவடைந்துள்ளது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது, பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும் இடம்பெற்றுள்ளது.

Reviewed by Author
on
September 26, 2018
Rating:

No comments:
Post a Comment