அண்மைய செய்திகள்

recent
-

இதுவரை 380 பேர் பலி - 350 பேர் காயம் -கோரத் தாண்டவமாடிய சுனாமி பேரலைகள் -


இந்தோனேஷியாலில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக இதுவரையில் 380 பேருக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக இந்தோனேஷிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
Sulawesi தீவில் Palu வழியாக 3 மீட்டர் (10 அடி) உயரத்துக்கு அலைகள் எழுந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வெளியாகிய வீடியோக்களில் மக்கள் கூச்சலிட்டு பதறி ஓடுவதனை அவதானிக்க முடிந்ததுடன், பல வீடுகள் மற்றும் பள்ளிவாசல்கள் சேதமடைந்துள்ளதனை காண முடிந்தது.
பயங்கரமான அதிர்வு காரணமாக ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள், கடைகள், ஹோட்டல்கள் மற்றும் வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளது.
மீட்பு முயற்சிகள் தீவிரமாக நடைபெறுகின்ற நிலையில், நிலச்சரிவு காரணமாக Paluவின் முக்கிய வீதிகள் தடைப்பட்டுள்ளன.

சுனாமி அனர்த்தம் காரணமாக 384 பேர் உயிரிழந்துள்ளதுடன் 350 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக இந்தோனேஷிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை 380 பேர் பலி - 350 பேர் காயம் -கோரத் தாண்டவமாடிய சுனாமி பேரலைகள் - Reviewed by Author on September 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.