ஏறாவூர் நகர சபைக்கு நாடாளுமன்ற கோப் விருது -
குறித்த விருது வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியின் அரங்கில் இடம் பெற்றுள்ளது.
இது ஏறாவூர் நகர சபைக்குக் கிடைத்த இரண்டாவது கோப் குழு விருதாகும். 2015ம் ஆண்டும் இந்த விருது ஏறாவூர் நகரசபைக்கு கிடைக்கப் பெற்றிருந்தது.
அரசியல் அலுவலங்களில் தங்களது வருமானங்கள் மற்றும் செலவீனங்கள் தொடர்பில் சிறந்த கணக்கீட்டு முறைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு ஆண்டு தோறும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 2015 மற்றும் 2016ம் ஆண்டுக்கான விருதுகள் ஏறாவூர் நகர சபைக்குக் கிடைக்கப் பெறுவதன் ஊடாக தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் கோப் விருதை ஏறாவூர் நகர சபை பெற்றுக்கொண்டுள்ளது.
இந்த விருதுகளை ஏறாவூர் நகர சபை பெற்றுக் கொண்டுள்ள 2015, மற்றும் 2016 ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாண உள்ளூராட்சிக்கு முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் பொறுப்பாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏறாவூர் நகர சபைக்கு நாடாளுமன்ற கோப் விருது -
Reviewed by Author
on
September 06, 2018
Rating:

No comments:
Post a Comment