மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது-வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு (படம்)
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றகின்ற வைத்தியர்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகள் அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் வைத்தியர்கள் மேற்கொண்டு வந்த பணிப்பகிஸ்கரிப்பு நேற்று வெள்ளிக்கிழமை(7) மாலையுடன் கைவிடப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் உதவி வைத்திய அத்தியட்சகர் ரி.ஒஸ்மன் டெனி தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை காலை பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்திய அதிகாரி மற்றும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஆகியோர் தாக்கப்பட்ட சம்பவங்களை கண்டித்து வைத்தியர்கள் வியாழன் காலை முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
-இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை(7) அவசர கலந்துரையாடல் இடம் பெற்ற போதும் தொடர்ச்சியாக பணிப்பகிஸ்கரிப்பை வைத்தியர்கள் மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பை அதிகரித்தல், நோயாளர்களை பார்வையிட வருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் ஆகிய மூன்று கோரிக்கைகளை வைத்தியர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகத்திடம் முன் வைத்திருந்தனர்.
-இந்த நிலையில் குறித்த கோரிக்கையை அமுல் படுத்தும் நடவடிக்கைகளை மன்னார் பொது வைத்தியசாலை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
-இதற்கு அமைவாக நேற்று வெள்ளிக்கிழமை07-09-2018 bமாலை முதற்கட்டமாக வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பை அதிகரித்துள்ளதோடு, நோயாளர்களை பார்வையிடுபவர்களின் எண்ணிக்கையினையும் மட்டுப்படுத்தியுள்ளனர்.
-இந்த நிலையில் வைத்தியர்கள் தமது பணிப்பகிஸ்கரிப்பை நேற்று வெள்ளிக்கிழமை மாலையுடன் கைவிட்டுள்ளனர்.
-இன்று (8) சனிக்கிழமை காலை முதல் வைத்தியசாலையின் நடவடிக்கைகளை வழமை போல் இடம் பெற்று வருகின்றது.
பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு வாரத்தினுல் மேலதிகமாக பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது-வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு (படம்)
Reviewed by Author
on
September 08, 2018
Rating:
No comments:
Post a Comment