யாழ் நல்லூர் ஆலய தேர் திருவிழா
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா இன்றாகும்.
நாடெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ கந்தன் வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் ஏறி தற்போது வீதி வலம்வந்துகொண்டு இருக்கின்றான் . 25 நாட்கள் இடம்பெறும் மகோற்சவ திருவிழாவில் நாளை தீர்த்தத்திருவிழா ஆகும்.
உள்நாடு மற்றும் புலம்பெயர் நாடுகள் அனைத்திலுமிருந்து வருகை தந்த அடியார்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிக்கொள்வதை காணக்கூடியதாகவுள்ளது.
யாழ் நல்லூர் ஆலய தேர் திருவிழா
Reviewed by Author
on
September 08, 2018
Rating:

No comments:
Post a Comment