பிரபல திரைப்பட நடிகரான கருணாஸ் வீட்டில் வைத்து அதிரடி கைது!
முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகரும், திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16-ஆம் திகதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, திநகர் துணை கமிஷனர் அரவிந்தை கடுமையாக விமர்சனம் செய்தார். முதல்வர் நான் அடிப்பேன் என்று பயப்படுவதாகவும் கூறினார்.

மேலும், நீ கொலை கூட பண்ணு, அதனை சொல்லிட்டு பண்ணு. ஒரு நியாய தர்மம் இருக்க வேண்டும். என் ஜாதிகாரன் மேல கைய வச்சா கைய கால உடைச்சிருவேன்.
நாங்க எல்லாம், தூங்கி எழுந்து பல் துலக்கும் நேரத்தில் கூட கொலை செய்யவும் தயங்க மாட்டோம் என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசினார்.
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருணாஸ் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று அதிகாலை சென்னை சாலிகிராமத்திலுள்ள கருணாஸ் வீட்டிற்கு பொலிசார் வருகை தந்தனர்.
இதில் 2 காவல் ஆணையர்கள், 2 உதவி ஆணையர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட பொலிசார் கருணாஸ் வீட்டின் முன்பு குவிக்கப்பட்டனர். இதையடுத்து பொலிசார் கருணாஸை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட போது செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், ஒரு சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய வேண்டும் என்றால் சபாநாயகரின் அனுமதி பெற வேண்டும், அப்படி ஒரு அனுமதியைப் பெற்றார்களா என தெரியவில்லை என கூறினார்.
நான் எனது சமுதாய உரிமை குறித்து தான் பேசினேன். அதற்காக 307 சட்டப் பிரிவில் என் மீது வழக்குப் போட்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி அரசு திட்டமிட்டு பேச்சுரிமையைப் பறிக்கிறது எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் சிறைச்சாலைகள் எங்கள் சமுதாய மக்களுக்காத்தான் கட்டப்பட்டுள்ளது. சிறைக்கு செல்வதற்கொல்லாம் அஞ்சுபவன் நான் அல்ல என்றும் கருணாஸ் குறிப்பிட்டார்.
துப்பாக்கி முனைக்கு நெஞ்சை நிமிர்த்திக் காட்டும் சீவலப்பேரி பாண்டி பரம்பரையில் வந்தவன் நான் , இந்த வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்று கருணாஸ் கூறியுள்ளார்.
பிரபல திரைப்பட நடிகரான கருணாஸ் வீட்டில் வைத்து அதிரடி கைது!
Reviewed by Author
on
September 23, 2018
Rating:
No comments:
Post a Comment