தியாகத்தின் பெருமகனே....திலிபனே.....
திருநாட்டின்
திருமகனே.... திலிபனே
திரு ஈழத்தின்
தியாகத்தின் பெருமகனே.... திலிபனே...
சிந்தையில்-பதவி
சிலந்தி வலையோடு
சில்மிஷங்களோடு
சிதறிக்கிடக்கும் தலைமைகள்
சிந்திக்கவும் -உன்னை
சிலைவைக்கவும்-உனக்கு-நேரமில்லை எமக்கு
சிரிக்கிறது பேரினவாதம்-
சில தடைகளும் உன்னை நினைக்க-நீதி
சிங்கள இராணுவமும் இந்திய இராணுவத்திற்கும்
சிம்மசொப்பனமாய்-நீ
சீறீனாய் அகிம்சையால்
சிரம் தாழ்த்தினாய் ஈழத்திற்காய்
சித்திரமாய் பலருக்கு-நீ
சிம்மாசனம் எமது இதயத்தில்-உனக்கு
சிகரமும் உன் தியாகத்திற்கு முன்னாள்
சிரம்தாழ்த்தும்....................
மூச்சில் ஈழம் சுவாசித்தாய்
முடிவு கண்டாய்.....................
முப்பத்தொரு ஆண்டுகள் ஆனாலும்
முடங்கிக்கிடக்கிறது-தமிழினம்
முத்துக்குளிக்கும் நாள்வரும்
ஈழம் மலரும்
இறவாத உம்தியாகம் ஒளிரும்.
-தமிழ்மாடு-
திலிபன் எனும் பெயரில் அறியப்படும் பார்த்திபன் இராசையா என்பவர் (நவம்பர் 29, 1963 – செப்டெம்பர் 26, 1987) தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு ஆரம்பக்கால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவராவர். இவர் இலங்கை, யாழ்ப்பாணம், ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்தவர். இவரின் மறைவின் பின்னர் புலிகள் அமைப்பில் லெப்டினன் கேணல் திலிபன் எனும் நிலை வழங்கப்பட்டது. இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர்.
இவரை இந்திய அரசு இறக்க விட்டது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணம்.
1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48மணிக்கு லெப்டினன் கேணலாக,யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலிபன் மரணம் எய்தினார்.
தியாகத்தின் பெருமகனே....திலிபனே.....
Reviewed by Author
on
September 26, 2018
Rating:

No comments:
Post a Comment