சினிமாவிற்கான மாற்றத்தை மறுபடியும் செய்து காட்டிய மணிரத்னம்,
மணிரத்னம் தமிழ் சினிமாவின் பெருமையை இந்தியளவிற்கு உயர்த்தி சென்றவர். கோலிவுட்டிலிருந்து பாலிவுட் சென்று இன்று வரை இவரின் கால்ஷிட் கிடைக்காத என பல வட இந்திய சினிமா கம்பெனிகள் காத்திருப்பது இவருக்கு மட்டும் தான்.
தமிழ் சினிமாவில் எந்த ஒரு புதிய முயற்சியையும் இவர் தொடங்கி வைத்ததாக தான் இருக்கும், இரண்டு நடிகள் இணைந்து நடிப்பதே பெரிய ஈகோ மோதலாக இருக்க, ரஜினிகாந்த், மம்முட்டி என்று இரண்டு சூப்பர் ஸ்டார்களை வைத்து படமெடுத்து கலக்கினார்.
எப்போதும் மல்டிஸ்டார் படங்களின் மீது மணிரத்னத்திற்கு ஒரு தீரா காதல், இருவர், தளபதி, அஞ்சலி, அக்னி நட்சத்திரம் என சிறியளவில் மல்டிஸ்டார்களை வைத்து படம் எடுத்த மணிரத்னம், ஆய்த எழுத்தில் அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணிக்கின்றார்.
ஆய்த எழுத்தில் உள்ள மூன்று புள்ளி போல் மூன்று கதாபாத்திரங்கள், அந்த கதாபாத்திரங்கள் ஒரு புள்ளியில் இணைந்து அடுத்த என்ன ஆகின்றது என்பதை பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் கூறியிருப்பார்.
ஆனால், தற்போதோ அரவிந்த்சாமி, அருண்விஜய், விஜய் சேதுபதி, சிம்பு என 4 பேரை வைத்து மிகப்பெரும் மல்டிஸ்டார்ஸ் படம் ஒன்றை இயக்கியுள்ளார், இதுபோல் ஒரு காம்பினேஷன் எல்லாம் அவர் ஒருவருக்கே சாத்தியம்.
இப்படி ஹீரோக்களின் ஈகோக்களை குறைத்து எல்லோரிடமும் நல்ல நடிப்பை வாங்கி அவர்களுக்கும் பெயர் வாங்கிகொடுப்பதில் அவருக்கு நிகர் யாருமே இல்லை, செக்கச்சிவந்த வானம் தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்டம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
சினிமாவிற்கான மாற்றத்தை மறுபடியும் செய்து காட்டிய மணிரத்னம்,
Reviewed by Author
on
September 22, 2018
Rating:
Reviewed by Author
on
September 22, 2018
Rating:


No comments:
Post a Comment