அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பாப்பாமோட்டை மீனவர்கள் போராட்டம்.....மகஜர் கையளிப்பு....


யுத்தகாலத்தில் மக்கள் இடம்பெயர்ந்தபோது மன்னார் நகரப்பகுதி கிராமமான தோட்டவெளி கிராமத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்திற் கொண்டு  மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட பாப்பாமோட்டை களப்புப் பகுதியில் தற்காலிகமாக மீன்பிடியில் ஈடுபட அப்போதைய அரசாங்க அதிபர் மற்றும் பிரதேசசெயளாலர் அனுமதி; வழங்கியிருந்தனர.
தற்போது யுத்தம் நிறைவுக்கு வந்தவுடன் தோட்டவெளி மக்களுக்கு இரண்டு இடங்களில் மீன்பிடியில் ஈடுபட அனுமதி கொடுக்கப்படடுள்ளது.


 இந்நிலையில் தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்ட பாப்பாமோட்டை பகுதியில் நிரந்தரமாக உரிமைகோரி தோட்டவெளி மீனவர்கள் செயற்பட்டுகின்றனர் என்றும் இதனால் பாப்பாமோட்டையை பூர்விகமாக கொண்ட தங்கள் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படுவதாகவும் பாப்பாமோட்டை பகுதியில் இருந்து யுத்தத்தின் காரணமாக இந்தியாவிற்கு சென்ற அதிகமான மக்கள் இந்தியாவிலிருந்து ஊர் திரும்புவதற்கு ஆயத்தமாக இருக்கின்றார்கள்.

 எனவும் அவர்கள் வரும்பட்சத்தில் தொழில் செய்ய இடம் போதாது எனவே இந்த பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வை வேண்டி மாந்தை  பாப்பாமோட்டை பிரதேசத்தை சேர்ந்த மீனவர்கள் இன்று மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாகவும் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டதுடன் குறித்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வை பெற்றுதர கோரி மன்னார் மவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.











மன்னார் பாப்பாமோட்டை மீனவர்கள் போராட்டம்.....மகஜர் கையளிப்பு.... Reviewed by Author on September 28, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.