மடு பரசன்குளம் பகுதியில் மக்களுடைய விவசாய காணியில் காட்டு யானை ஆபத்தான நிலையில் மீட்பு.படம்
மன்னார் மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பரசன்குளம் பகுதியில் மக்களுடைய விவசாய காணியில் காட்டு யானை ஒன்று நோய்வாய்ப்பட்ட நிலையில் 27-09-2018 கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக காட்டுயானை ஊருக்குள் வருவதாக மக்கள் தெரிவித்தனர்.
நீண்ட காலமாக மழை இன்மையால் குளங்கள் வற்றியும் தாவரங்கள் காய்ந்து போயுள்ளமையால் யானைக்கு உணவின்றி உடலிலே இயங்க கூடிய அளவு சக்தியின்றியே காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அருகிலுள்ள இராணுவத்தினரும்,மடு பிராந்திய வன ஜீவராசிகள் திணைக்களத்தினரும் யானைக்கு நீர்,உணவு கொடுத்தனர் .
எனினும் யானை உட்கொள்ளவில்லை.இந்த நிலையில் வருகை தந்த வட பிராந்திய வனஜீவராசிகள் திணைக்கள வைத்தியர் எஸ்.கிரிதரன் யானைக்கு மருத்துவம் செய்தார்.
இதன் போது யானை வெங்காய வெடியை உண்டதால் வெடி வெடித்து யானையின் வாய் உட்பகுதி பாதிக்கப்பட்டதனால் உணவு உட்கொள்ள முடியாமல் போனதால் நோய்வாய்ப்பட்டுள்ளதாக வைத்தியர் குறிப்பிட்டார்.
மேலும் யானையின் நிலை கவலைக்கிடமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மடு பரசன்குளம் பகுதியில் மக்களுடைய விவசாய காணியில் காட்டு யானை ஆபத்தான நிலையில் மீட்பு.படம்
Reviewed by Author
on
September 28, 2018
Rating:

No comments:
Post a Comment