மன் -பரிகாரிகண்டல் அ.த.க.பாடசாலையில்-கல்வி இராஜாங்க அமைச்சார் வே.இராதாகிருஷ்ணன்
மன்னார் பரிகாரிகண்டல் அ.த.க.பாடசாலையில் 11.5 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட ஆரம்பப் பிரிவு கற்றல் வள நிலையம் 26-09-2018 மாணவர்களின் பாவனைகளுக்காக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன் சாள்ஸ்நிர்மல நாதன் சிவசக்தி ஆனந்தன் போனறவர்களுடன் நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் உறுப்பினர்கள் மன்னார் மடு வலயக் கல்வி அலுவலர் சுகந்தி செபஸ்ரியன் மதத்தலைவர்களும் கலந்து கொண்டனர்
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் இராதாகிருஷ்ணன் முதல் தடவை வந்ததையிட்டு பாடசாலை சமூகத்தால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவவிக்கப்பட்டார். அவர்களின் மதிப்பளிப்பை ஏற்றுக் கொண்ட அமைச்சர் உரையாற்றும் பொழுது பாடசாலை கிராமங்களில் விருந்தினர்களுக்கு போடப்படும் மாலைகளை வைத்து அங்கே எவ்வளவு பிரச்சனை உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம் அந்த வகையில் இந்த பாடசாலையில் ஒரு மாலை போடப்பட்டதிலிருந்து இங்கே பிரச்சனை இல்லை என்பதை என்னால் உணர முடிகிறது என்று கூறிய அமைச்சர் தொடர்ந்து பேசுகையில்
அருகில் உள்ள பாடசாலை நல்ல பாடசாலை எனும் தொனிப் பொருளில் பாடசாலைகள் அபிவிருத்தி பெற்று வருகின்றன வளர்ச்சிக்கேற்ப பாடசாலையில் கட்டிடங்களும் கூடிக்கொண்டு போகின்றது இது மிக நல்ல விடயம் பாடசாலையில் கட்டிட திறப்பு விழா நடக்கும் பொழுது சிறைச்சாலைகளில் உள்ள கட்டிடங்களுக்கு மூடுவிழா நடைபெறும்
நாம் எத்தனை செல்வத்தையும் தேடலாம் நம்மிடம் நிலையாக நிலைத்து நிற்பது கல்வி செல்வம் மட்டும் என்பதை மாணவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.
இன்று மேடையில் நாங்கள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்வி அலுவலர்களாக இருக்கின்றோம் நாளை இந்த இடத்தில் நீங்கள் தான் இருக்கப்போகின்றீர்கள் அதற்குக் கல்வி மிக அவசியம் அதற்காக நமக்கு சுயகட்டுப்பாடுகள் மிக முக்கியம் இந்த பதின்ம வயது மிக பொல்லாதது இந்த வயதுதான் பல பிரச்சனைகளையும் பல சிக்கல்களையும் கொண்டுவரும் இந்த வயதை சிரமத்துடனும் சுய ஒழுக்கத்துடனும் கடந்துவிட்டீர்களானால்
உங்களை வெற்றி கொள்ள இந்த உலகில் எவரும் இல்லை என்று கூறிய அமைச்சர் இந்த நல்லாட்சி அரசாங்கம் வடமாகான மாணவர்களின் கல்விக்காக பல நல்ல திட்டங்களை வகுத்து செயற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

மன் -பரிகாரிகண்டல் அ.த.க.பாடசாலையில்-கல்வி இராஜாங்க அமைச்சார் வே.இராதாகிருஷ்ணன்
Reviewed by Author
on
September 27, 2018
Rating:

No comments:
Post a Comment