அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம்....

அனுராதபுர சிறைச்சாலையில்  தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ்  அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மன்னாரில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில்  27.09.2018 காலை  இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அனுராதபுரம்  சிறைச்சாலையில்   தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மதியரசன் சுலக்ஷன், இராசதுரை திருவருள், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், இராசாபல்லவன் தபோரூபன், இராசதுரை ஜெகன், சூரியகாந்தி ஜெயச்சந்திரன், கிளிநொச்சியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் சிவசீலன், வவுனியாவைச் சேர்ந்த தங்கவேல் நிமலன் ஆகிய 8 கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  அரசியல் கைதிகள்  உள்ளிட்ட ஏனைய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின்  விடுதலையை வலியுறுத்தி  வடக்கு , கிழக்கில் தொடர் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  கைதிகளை தமிழ் அரசியல் தலைமைகள்  உள்ளிட்ட அரச, அரசசார்பற்ற  நிறுவனங்களும் நேரடியாக சென்று  பார்வையிட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுவரும்   அரசியல் கைதிகள்  உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் கைதிகளின்  விடுதலை தொடர்பான போராட்டங்களும் அழுத்தங்களும்   கடுமையாக பிரஜோகிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற   உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர்   நேற்று நேரடியாக சந்தித்தனர்.

இந்த நிலையில்,   அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலை  மற்றும் பயங்கரவாத  தடைச்சட்ட நீங்கப்பட வேண்டும் போன்ற  கோரிக்கைகளை முன்வைத்து  மன்னாரில்  இந்த போராட்டம்  மேற்கொள்ளப்பட்டது.

போராட்டத்தில்   மன்னர் மாவட்ட பிரஜைகள் குழுவின் உறுப்பினர்கள் ,சர்வமத தலைவர்கள், அரசியல்   கைதிகளின்  உறவினர்கள்,    மன்னார் நகரசபை தலைவர் மற்றும் நகரசபை உறுப்பினரகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



மன்னாரில் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம்.... Reviewed by Author on September 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.