மன்னார் மறைசாட்சிகளை புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கான.... ரோமாபுரியில் இ.செபமாலை அடிகளார்
ரோமாபுரிக்கு பயனம் மேற்கொண்ட நமது மன்னார் மறைமாவட்ட அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் அவர்கள் ரோமாபுரியில் மன்னார் மறைசாட்சிகளை புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கான முன்னெடுப்புக்களை செய்து வருகின்ற அருட்பனி தோமஸ் அடிகளார் அவர்களை சந்தித்து மறைசாட்சிகளின் புனிதர் நிலை தொடர்பாக பல விடயங்களை கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது அருட்தந்தை தோமஸ் அடிகளார் மறைசாட்சிகள் தொடர்பான பல ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார் மேலும் மன்னார் மறைசாட்சிகள் தொடர்பான ஆவனங்கள் அடங்கிய சிறிய பெட்டகம் ஒன்றினையும் காண்பித்து மன்னார் மறைசாட்சிகளை புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கான முயற்சிகள் போதாது எனவும் குறிப்பிட்டுள்ளார் மேலும் மறைசாட்சிகளால் நம்மத்தியில் இடம்பெற்ற புதுமைகளை ஆவனப்படுத்துமாறும் மறைசாட்சிகள் தொடர்பான பக்தி முயற்சிகள் மறைமாவட்டம் முழுதும் இலங்கை நாடு முழுவதும் நடைபெற வேண்டும் என கோரியுள்ளதாக அருட்பனி இ.செபமாலை அடிகளார் தெரிவித்துள்ளார்.
மன்னார் மறைசாட்சிகளை புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கான.... ரோமாபுரியில் இ.செபமாலை அடிகளார்
Reviewed by Author
on
September 15, 2018
Rating:

No comments:
Post a Comment