அண்மைய செய்திகள்

recent
-

தியாக தீபம் திலீபனை நினைவுகூர்ந்த தென்னிந்திய திரை உலகின் முக்கிய பிரபலம் -


தமிழீழத்திற்காக 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து தன் இன்னுயிர் துறந்தவர் தியாக தீபம் திலீபன்.
இந்நிலையில், தியாக தீபம் திலீபனின் 31ஆவது நினைவேந்தல் நேற்றைய தினம் வடக்கு, கிழக்கு தாயகப் பகுதிகள் எங்கும் அனுஷ்டிக்கப்பட்டதோடு புலம்பெயர் தமிழர் வாழும் பிரதேசங்களிலும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.

மேலும், யாழ். நல்லூரில் இவர் உயிரிழந்த இடத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தன.
குறித்த நினைவேந்தல் நிகழ்வுகளில் பெருமளவிலான பொதுமக்கள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் என பலரும் கலந்து கொண்டு தமது அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.
இந்நிலையில், தென்னிந்திய தமிழ் திரை உலகின் பிரபல நகைச்சுவை நடிகர் சதீஸ் தியாகி திலீபனின் நினைவிடத்தில் இருந்து எடுத்த புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டு நேற்றைய தினம் அவரை நினைவுகூர்ந்துள்ளார்.

நமது சகோதரர்களுக்காக திரு.திலீபன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த இடம் என நகைச்சுவை நடிகர் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தியாக தீபம் திலீபனை நினைவுகூர்ந்த தென்னிந்திய திரை உலகின் முக்கிய பிரபலம் - Reviewed by Author on September 28, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.