விக்னேஸ்வரனின் எதிர்ப்பார்ப்பு ஒருபோதும் நிறைவேறாது! -
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியாகப் பதிவு செய்யப்படும் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதிர்பார்ப்பது, ஒருபோதும் நடைபெறபோவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கட்சியாகப் பதிவு செய்யப்பட்டு, அதன் தலைமை மாறினால் அதில் முதலமைச்சர் வேட்பாளராக மீளவும் களமிறங்க சந்தர்ப்பமுண்டு என தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, தேர்தலில் வாக்குப் பெறுவதற்கான இயந்திரமாகப் பயன்படுத்துவதையே, தமிழரசு கட்சி விரும்புகிறது.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியாகப் பதிவு செய்யப்படும் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதிர்பார்ப்பது, ஒருபோதும் நடைபெறபோவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழரசுக் கட்சியானது கூட்டமைப்பை வெறுமனே நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் வாக்குகளைப் பெறுவதற்கான இயந்திரமாகவே பயன்படுத்த விரும்புகின்றதே தவிர, அதனை கட்சியாக பதிவுச் செய்ய அவர்கள் தயாராக இல்லை.
முதலமைச்சர் கூறுவது போன்று, அது கட்சியாக பதிவு செய்யப்படும் என எதிர்பார்ப்பது, ஒருபோதும் நடைபெறப் போவதில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, பதிவுசெய்யப்படமாட்டாது என்பதையே, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் அழுத்தம் திருத்தமாக தொடர்ச்சியாக கூறிவருகின்றார்கள்” எனவும் அவர் தெரிவித்தார்.
விக்னேஸ்வரனின் எதிர்ப்பார்ப்பு ஒருபோதும் நிறைவேறாது! -
Reviewed by Author
on
September 28, 2018
Rating:

No comments:
Post a Comment