திருமுருகன் காந்தி சிறையில் திடீர் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி -
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டிற்கு நீதி கேட்டு ஐ.நா மன்றத்தில் முறையிட்டார்.
இந்த நிகழ்வு முடிந்த பின்னர், பெங்களூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த திருமுருகன் காந்தியை தமிழக பொலிஸார் கடந்த ஆகஸ்ட் 9-ம் திகதி விமான நிலையத்தில் வைத்தே கைது செய்தனர்.

தமிழகத்தை மறைமுகமாக ஆட்சி செய்யும் பாஜகவின் சதித்திட்டம் இந்த அதிரடி கைது என சமூக ஆர்வலர்கள் பலரும், ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
கைது செய்யப்பட்டு இன்றுடன் 45 நாட்கள் ஆகியுள்ள நிலையில், திருமுருகன் காந்தி சிறையில் திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிசிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், திருமுருகன் காந்திக்கு சர்க்கரை மற்றும் ரத்தம் அழுத்தம் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
முன்னதாக உடல்நிலை குறைபாடு காரணமாக தன்னை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லுமாறு திருமுருகன் காந்தி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு அனுமதியளித்து மயிலாடுதுறை, ஆலந்தூர், எழும்பூர் நீதிமன்ற நீதிபதிகளும் உத்தரவிட்டிருந்தார். ஆனால் பொலிஸார் இதுவரை அவரை சிகிச்சைக்கு உட்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருமுருகன் காந்தி சிறையில் திடீர் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி -
Reviewed by Author
on
September 25, 2018
Rating:
No comments:
Post a Comment