அண்மைய செய்திகள்

recent
-

உலகின் ஆபத்தான நாட்டில் ஹீரோ மருத்துவர் -மருத்துவ கருவிகள் இல்லை... வாரத்தில் 50 அறுவைசிகிச்சை


உலகின் ஆபத்தான நாடுகளில் ஒன்றான தெற்கு சூடானில் அங்குள்ள மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் ஒரே ஒரு பகுதி அந்த மருத்துவமனை மட்டுமே.
கடந்த 5 ஆண்டுகளாக தொடர் கலவரத்தால் யுத்த பூமியாக மாறியுள்ளது தெற்கு சூடான். இதுவரை இங்குள்ள நூறுக்கும் அதிகமான மனித உரிமை ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
உள் நாட்டு கலவரம், கூட்டக் கொலைகள், பயங்கரவாத தாக்குதல் என எப்போதும் சிவந்தே காணப்படும் நாடு இதுவென இங்குள்ள மக்கள் கதை சொலுகின்றனர்.
ஆனால் புஞ்ச் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆறுதலாகவும் தணலாகவும் செயல்பட்டு வருகிறது இப்பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்று.
உலகமெங்கும் தற்போது கவனத்தை ஈர்த்துவரும் 52 வயது மருத்துவர் ஈவன் அதார் அடஹர். வாரத்தில் சுமார் 50 அறுவைசிகிச்சைகள் இந்த மருத்துவமனையில் நடைபெறுகிறது.

போதிய மருத்துவ கருவிகளோ உரிய மருந்துகளோ இங்கு இல்லாமலே இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் அறுவைசிகிச்சைக்கான கருவிகளை இப்பகுதிக்கு கொண்டுசெல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தேவையான மருந்துகளை இங்கு எடுத்துவருவதற்கே கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதில் உள்ள சுமார் 2 லட்சம் மக்கள் இந்த மருத்துவமனையை நம்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவர்கள், செவிலியர்களை பயங்கரவாதிகள் தொடர்ந்து கடத்திச் செல்வதால் மருத்துவர்களின் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது என கூறும் இவர், தமது குடும்பத்தினரை சந்திக்க ஆண்டுக்கு மூன்று முறை மட்டுமே சென்றுவருவதாக தெரிவித்துள்ளார்.
இவரது செயல்பாட்டை பாராட்டி ஐக்கிய நாடுகள் மன்றம் 2018 ஆம் ஆண்டுக்கான Nansen Refugee விருதை அளித்து கவுரவித்துள்ளது.
உலகின் ஆபத்தான நாட்டில் ஹீரோ மருத்துவர் -மருத்துவ கருவிகள் இல்லை... வாரத்தில் 50 அறுவைசிகிச்சை Reviewed by Author on October 04, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.