அண்மைய செய்திகள்

recent
-

ஒரே நேரத்தில் 60 பேரை பலி வாங்கிய ரயில் விபத்து நடந்தது எப்படி:வெளியான அதிர்ச்சி தகவல்


இந்தியாவின் அமிர்தசரஸில் நடந்த ரயில் விபத்தின் போது ஒரே நேரத்தில் இரு ரயில்கள் எதிரெதிரே வந்ததால், மக்கள் தப்பிக்க முடியாமல் ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் சவுரா பஜார் பகுதியில் உள்ள ஜோதா பதக் எனும் இடத்தில் ராவணன் உருவபொம்மை எரிப்பு நிகழ்ச்சி இன்று மாலை நடந்தது.

குறித்த நிகழ்வு நடக்கும் இடத்துக்கு அருகே ரயில்வே தண்டவாளம் செல்கிறது. நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடி இருந்தனர்.
பொதுமக்கள் கூட்டம் அதிகம் என்பதால் பெரும்பாலானோர் ரயில் தண்டவாளத்தை மறித்து நின்றிருந்தனர்.

அப்போது ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி ரயில் ஒன்று வேகமாக வந்தது, பட்டாசு வெடிக்கும் சத்தத்தில் தண்டவாளத்தில் ரயில் வரும் சத்தமும்,ரயிலையும் மக்கள் கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வேகமாக வந்த ரயில், தண்டவாளத்தில் நின்றிருந்த மக்கள் மீது கண்ணிமைக்கும் வேகத்தில் மோதிவிட்டுச் சென்றது.

மேலும் எதிர்த்திசையில் அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு ரயிலும் வந்ததால் மக்களால் தப்பித்து செல்ல முடியாமல் ரயிலில் அடிபட்டு இறந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பவம் நடந்த போது, அந்த இடத்தில் 700-க்கும் மேற்பட்ட மக்கள் கூடி இருந்ததுள்ளனர். ரயில் மோதிய விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் சம்பவயிடத்தில் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 10 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் பலி எண்ணிக்கை 60 என அதிகரித்துள்ளது. மட்டுமின்றி 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமிர்தசரஸ் துணை ஆட்சியர் ராஜேஷ் சர்மா, தற்போதைய தகவலின்படி, அறுதியிட்டு எதையும் கூற முடியாது என்றார்.
குறித்த கோர விபத்து தொடர்பில் தகவல் அறிந்த பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் தனது இஸ்ரேல் பயணத்தை ரத்துசெய்து நாளைக் காலை அமிர்தசரஸ் நகருக்கு வருகை தரவுள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் 60 பேரை பலி வாங்கிய ரயில் விபத்து நடந்தது எப்படி:வெளியான அதிர்ச்சி தகவல் Reviewed by Author on October 20, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.