மன்னாரின் அபிவிருத்திக்கு பாரிய தடையாக சுற்றாடல் பாதிப்பு.....C.A.மோகன்றாஸ்
கடும் வறட்சி முறையற்ற கழிவு முகாமைத்துவம் இயற்கை வள அழிப்பு கடலரிப்பு கண்டல் தாவர அழிப்பு நில அபகரிப்பு பாடழிப்பு போன்ற செயற்பாடுகளால் மன்னார் மாவட்டத்தை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்ல மிகவும் தடையாக இருப்பதாக மன்னார் அரச அதிபர் தெரிவித்தார்
கடந்த ஐந்தாம் திகதி மன்னார் நகரசபை மைதானத்தில் நடைபெற்ற சுற்றாடல் மாநாட்டில் பங்குகொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் இதனை தெரிவித்தார்
அவர் மேலும் உரையாற்றுகையில் மன்னார் மாவட்டத்தில் கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டோம் பொது மக்களும் கால்நடைகளும் விவசாயம் மேட்டுநிலப்பயிர்ச் செய்கை என்பன பாதிக்கப்பட்டது
வறட்சியிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள எமக்கு இருக்கின்ற ஒரு வரம் அருவி ஆறு வீனாக கடலில் கலக்கும் அருவி ஆற்றுக்கு அணைக்கட்டுகளை அமைத்து கட்டுக்கரை குளத்திற்கும் அகத்தி முறிப்பு குளத்திற்கும் நீரினை சேமித்துக்கொள்வதன் மூலம் மக்களின் அனைத்துத் தேவைகளுக்குமான நீரினை பெற்றுக் கொள்ளலாம்
அதே போல் விலங்குகளுக்கான நீரின்மையை போக்குவதற்கு சிறிய குளங்களை நாம் இணைக்க வேண்டும்
மன்னார் மாவட்டத்தில் அதி கூடிய வெப்பங்களை தவிர்த்துக் கொள்ள வீதியோரங்களிலும் வீடுகளிலும் அதிக மரங்களை நடுவதின் மூலம் எதிர்காலத்தில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்
கழிவு முகாமைத்துவத்தை பொறுத்தமட்டில் திண்மக்கழிவுகளை நவீன முறையில் தரம் பிரித்து அகற்றும் பொறிமுறை எம்மிடம் இல்லை
கழிவுகளை மண்ணால் மூடுவதன் மூலம் சூழல் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கமுடியும்
இயற்கை வள அழிப்பு ஆற்று மணல் அகழ்வு கிரவல் அகழ்வு ஆற்று மணல் சாதாரன பொது மக்களுக்கு தேவையான ஒன்று ஆனால் முறையான கண்காணிப்பு இல்லை இதனை அரச அதிபர் பிரதேச செயலர் அபாலிசார் முறையான கவனத்தை மேற்கொண்டால் தேவைக்கு மட்டு மணல் அகழ்வு செய்வதை நடைமுறைப்படுத்த முடியும்
மணல் மேடு அகழ்வுகளால் கடலரிப்பு ஏற்படுவதுடன் நன்நீர் உவர் நீராகும் அபாயம் ஏற்படுகிறது.
இவற்றை தடுபப்பதற்காக அதிகூடிய விழ்ப்புனர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் இயற்கை வளங்களை பாதுகாதத்து அவற்றின் முழுமையான பலன்களை எம்மால் பெற முடியும் என்று மன்னார் மாவட்ட அரச அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் அவர்கள் தெரிவித்தார்.
மன்னாரின் அபிவிருத்திக்கு பாரிய தடையாக சுற்றாடல் பாதிப்பு.....C.A.மோகன்றாஸ்
Reviewed by Author
on
October 09, 2018
Rating:

No comments:
Post a Comment