இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு நிறைவு மன்னாரில் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி-படங்கள்
இலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு நிறைவையொட்டி மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணியை திங்கட்கிழமை 08-10-2018காலை ஆரம்பித்துள்ளனர்.
தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு அதிகாரி பிரிக்கேடியர் செனரத் பண்டார தலைமையில் இன்று(8) திங்கட்கிழமை காலை 8 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்ப நிகழ்வு இடம் பெற்றது.
-இதன் போது பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, விருந்தினர்களாக மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார்,சர்வமதத்தலைவர்கள், மன்னார் நகர சபையின் செயலாளர் பிரிட்டோ லெம்பேட், மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது இலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு நிறைவையொட்டி மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி எதிர்வரும் இரு தினங்கள் இடம் பெறவுள்ளது.
-பாடசாலைகள்,பொது இடங்களில் குறித்த சிரமதானப்பணிகள் இடம் பெறவுள்ளதோடு,குறித்த பணியில் 70 அதிகாரிகளும்,800 இராணுவ வீரர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு நிறைவு மன்னாரில் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி-படங்கள்
Reviewed by Author
on
October 09, 2018
Rating:
No comments:
Post a Comment