அண்மைய செய்திகள்

recent
-

உங்களுக்கு இதய நோய் உள்ளதா? தெரிந்துகொள்ள கால்விரலை இப்படி தொட்டால் போதும்!


இதய நோய் உள்ளதா என்பதை மருத்துவமனைக்கு சென்று தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை தாண்டி நமது கால் விரல்களை குனிந்து தொடுவதன் மூலமே எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.
இதய நோய் ஏற்பட காரணம்
  • எந்த வித காரணமின்றி அதிகமாக மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு இதயநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் பொழுதும் இதயம் பாதிக்கப்படும்.மேலும் கட்டுப்பாடான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி போன்றவையால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம்.
  • நீரிழிவு நோயாளிகளுக்கு கரோனரி குழாயில் அடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் உடற்பருமனையும், அதிக ரத்த அழுத்தம் அதிக கொலஸ்ட்ரால் எல்லாம் இணைந்து இதயத்தில் நோய் ஏற்பட வழிவகை செய்கின்றன.
  • உடற்பருமன் உடையவர்களுக்கு, இதய நோய் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடற்பருமன் உள்ளவர்கள் சராசரியாக மாதத்திற்கு 2 முதல் 3 கிலோ எடைகுறைய தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
  • இதய நோய் வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துதல். எனவே இது போன்ற செயல்களை செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது
இதய நோயை கண்டறிய செய்ய வேண்டியவை
  • முதலில் நின்றபடி அல்லது தரையில் அமர்ந்தபடி இதை நீங்கள் செய்யலாம். நிற்கிறீர்கள் என்றால் உங்கள் இரு கால்களையும் சேர்த்து நிமிர்ந்து நில்லுங்கள்.
  • இதுவே உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்றால் சம நிலையான நிலப்பரப்பில் கால்கள் இரண்டையும் நீட்டி அமருங்கள். இப்போது உங்களது முட்டியை மடக்காமல் கைகளை நீட்டில் கால் விரலை தொட முயற்சியுங்கள்.
  • உங்களால் தொட முடிந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அர்த்தமாகும். தொட முடியவில்லையெனில் உங்கள் கை விரலுக்கும் கால் விரலுக்கும் இருக்கும் இடைவெளியே உங்களுக்கும் இதய ஆரோக்கியத்துக்கும் இடையே உள்ள தூரம் ஆகும்.
  • தொப்பை உள்ளவர்கள் அதாவது, அதிக கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களால் இதை எளிதாக செய்ய முடியாது, தேவையற்ற கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தத்தால் தான் அதிகமாக இதய நோய் ஏற்படுகிறது என்பதை மறவாதீர்கள்.


உங்களுக்கு இதய நோய் உள்ளதா? தெரிந்துகொள்ள கால்விரலை இப்படி தொட்டால் போதும்! Reviewed by Author on October 25, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.