டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் போராடி வென்ற டென்மார்க் வீராங்கனை -
செக் குடியரசின் பெத்ரா குவித்தோவாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
நேற்று நடந்த வெள்ளை பிரிவு ரவுண்ட் ராபின் லீக் சுற்றில் முதல் ஆட்டத்தில் வோஸ்னியாக்கி (2வது ரேங்க்) - குவித்தோவா (4வது ரேங்க்) மோதினர்.
முதல் செட்டில் வோஸ்னியாக்கி 7-5 என வென்று முன்னிலை பெற்றார்.
இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த குவித்தோவா 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.
மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் குவித்தோவாவின் சர்வீஸ் ஆட்டங்களை மிக எளிதாக முறியடித்த வோஸ்னியாக்கி 7-5, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் போராடி வென்றார்.
இப்போட்டி 2 மணி, 19 நிமிடத்துக்கு வரை நீடித்தது.
பின் வெள்ளை பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் எலினா ஸ்விடோலினா (6வது ரேங்க், உக்ரைன்) - கரோலினா பிளிஸ்கோவா (7வது ரேங்க், செக்.) மோதி எலினா ஸ்விடோலினா 2-1 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார்.
டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் போராடி வென்ற டென்மார்க் வீராங்கனை -
Reviewed by Author
on
October 25, 2018
Rating:

No comments:
Post a Comment