செல்ஃபி எடுக்கும்போது நிகழும் மரணங்களில் எந்த நாடு முதலிடம் தெரியுமா? -
உலகில் உயரமான கட்டடங்கள் மற்றும் மலைகளில் இருந்து கீழே விழுதல், பயணிங்கள் போது, நீரில் மூழ்கும் போது என விபரீதமான முறையில் பலர் செல்ஃபி எடுக்கின்றனர். ஆனால், இது போன்ற செல்ஃபி முயற்சிகளில் பலர் மரணமடைந்துள்ளனர்.
அதே போல் செல்ஃபி எடுக்கும்போது விலங்குகளால் தாக்கப்பட்டு, தவறுதலாக துப்பாக்கி சூடு நிகழ்ந்து எனவும் பலர் மரணித்துள்ளனர்.
இந்நிலையில், உலகளவில் செல்ஃபி எடுக்கும்போது எந்த நாட்டில் மரணங்கள் அதிகம் நிகழ்கின்றன என்பது தொடர்பான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில், செல்ஃபி எடுக்கும்போது இறந்தவர்களில் பெரும்பாலும் 20 முதல் 29 வயதினராக இருப்பதாக தெரியவந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக 10 முதல் 19 வயதுடையவர்கள் பெரும்பாலும் இறந்துள்ளனர்.
உலகெங்கும் செல்ஃபி எடுக்கும்போது இறந்தவர்களில் 72.5 சதவிதம் பேர் ஆண்கள் என்று தெரிய வந்துள்ளது. மேலும், உலகளவில் செல்ஃபியால் ஏற்படும் மரணங்களில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 50 சதவிதம் பேர் செல்ஃபி எடுக்கும்போது இறந்துள்ளனர். இந்தியாவிற்கு அடுத்த இடத்தில் ரஷ்யா, அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளதாக குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பல மரணங்களில் இறப்புக்கான காரணமாக செல்ஃபி எடுத்ததை அறிவிக்கப்படவில்லை என்பதால், உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
செல்ஃபி எடுக்கும்போது நிகழும் மரணங்களில் எந்த நாடு முதலிடம் தெரியுமா? -
Reviewed by Author
on
October 09, 2018
Rating:

No comments:
Post a Comment