கின்னஸ் சாதனை தமிழருக்கு நேர்ந்த சோகம் -
நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமச்சந்திரன் (27).
இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது விரல் நகத்தை துளையிட்டு, 22.5 கிலோ எடையுள்ள பொருளைத் தூக்கிக் காட்டி சாதனை படைத்தார்.
ஹேமச்சந்திரனின் இந்த அரிய சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது.

இதையடுத்து பல்வேறு முன்னணி தொலைக்காட்சி சேனல்களின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நிறைய அசாத்திய முயற்சிகளை செய்துகாட்டி பாராட்டுப் பெற்று வந்தார்.
இந்நிலையில் தனது வீட்டில் ஹேமச்சந்திரன் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம் செய்துகொண்டு இன்னும் ஒரு வருடம் கூட நிறைவடையாத நிலையில், அவர் உயிரை மாய்த்து கொண்டது குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கின்னஸ் சாதனை தமிழருக்கு நேர்ந்த சோகம் -
Reviewed by Author
on
October 27, 2018
Rating:
No comments:
Post a Comment