அண்மைய செய்திகள்

recent
-

எமது நாட்டிலே டெங்கு நோய் மக்களை மிகவும் பாதிக்கின்றது-மன்னார் ஆயர்


எமது நாட்டிலே டெங்கு நோய் மக்களை மிகவும் பாதீத்திருக்கின்றது. அதனை தடுக்க  எமது வீடுகள், நிறுவனங்கள், பாடசாலைகள் பல தெருக்கள் இவை எல்லாம் சுத்தமாக இருந்தால் தான் நாங்கள் டெங்குவை பரப்பும் அந்த நுளம்பை அழிக்க முடியும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு நிறைவையொட்டி மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணியை இன்று திங்கட்கிழமை(8) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே  மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,,,,

இலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு நிறைவையொட்டி மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணியை இன்று திங்கட்கிழமை(8) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இராணுவத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த சிறமதானப்பணிகள் மன்னாரிலும் இடம் பெறுகின்றமை மகிழ்ச்சி அழிக்கின்றது.


-எமது நாட்டிலே இந்த டெங்கு நோய் மக்களை மிகவும் பாதீத்திருக்கின்றது. அதற்கு பிரதான காரணம் எமது வீடுகள், நிறுவனங்கள், பாடசாலைகள் பல தெருக்கள் இவை எல்லாம் சுத்தமாக இருந்தால் தான் நாங்கள் டெங்குவை பரப்பும் அந்த நுளம்பை அழக்க முடியும்.

இதனால் தான் இப்படியான ஒரு சிறப்பான சிரமதானத்தை இராணுவம் மேற்கொண்டு செய்யும் போது நாங்கள் அதைப்பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

இவர்கள் எடுக்கின்ற இந்த முயற்சிகள் நல்லதொரு விளைவை எமக்குகொண்டு வர வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன். இராணுவத்தின் இந்த செயற்பாட்டிலே அவர்கள் பல இடங்களுக்கும் சென்று இந்த சிரமதானப்பணிகளை செய்வார்கள்.

தோடு அவர்கள் பல்லாயிரக்கணக்கான மரக்கண்றுகளை இலவசமாக கொடுத்து அதனை நாட்ட வைத்து எமது நாட்டிலே மரங்கள் வளர்ந்து எமது நாட்டுக்கு வளம் பெற்று தர வேண்டும் என்று அவர்கள் முன் வருகின்றார்கள்.
இதற்காக  இராணுவத்தை நாங்கள் பாராட்டுகின்றோம்.அவர்களுக்கு நன்றி கூறுகின்றோம்.

இன்று திங்கட்கிழமை (8) ஆரம்பிக்கும் இந்த முயற்சி வெற்றிகரமாக நிறைவடைய வேண்டும்.எமக்கு காலநிலை சிறந்ததாக இல்லாத போதிலும், கடும் மழை பெய்து கொண்டிருப்பதால்,இன்னும் வரும் நாட்களில் கூட மழை பெய்யக்கூடும் என வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றமையினால் அவ்வேளையில் இந்த கால நிலையும் அவர்களுக்கு உதவ வேண்டும்.

இவர்கள் செய்கின்ற சிரமதானப்பணிகள் மற்றும் அனைத்து நடவடிக்கைகளும் சிறப்பாக நிகழ வேண்டும் என ஆசிக்கின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், சர்வ மதத்தலைவர்கள், மன்னார் நகர சபையின் செயலாளர் பிரிட்டோ லெம்பேட், மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எமது நாட்டிலே டெங்கு நோய் மக்களை மிகவும் பாதிக்கின்றது-மன்னார் ஆயர் Reviewed by Author on October 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.