சாதனை தமிழச்சியின் கண்ணீர் கதை
கடந்த 2006-ல் நடைபெற்ற ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கத்தை வென்று கொடுத்தவர் தமிழகத்தை சேர்ந்த சாந்தி சவுந்தரராஜன்.
ஆனால் அவரிடம் நடத்தப்பட்ட பாலின சோதனையில் அதிகளவு டெஸ்டோஸ்டெரோன் இருப்பதாக கூறி பதக்கம் திரும்ப பெறப்பட்டது.
இந்த அளவு டெஸ்டோஸ்டெரோன் இருப்பவர்கள் பெண்களுடன் போட்டி போட தடை விதிக்கப்பட்டது.

இதனால் ஏழைக்குடும்பத்தில் இருந்து சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் வந்த தமிழச்சியின் கனவு சிதைக்கப்பட்டது.
மேலும், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் அடியெடுத்து வைத்ததில் இருந்தே சாந்திக்கு சோதனைகள் தான்.
தாழ்ந்த சாதி என்பதால் அவருக்கு சாதிய ரீதியான எதிர்ப்புகள் வந்தன.
குறிப்பாக ராஜன் ஆப்ரஹாம் என்பவர் சாந்தி மீது அதிக குற்றசாட்டுகள் வைத்தார்.
இதையடுத்து அவர் மீது பொலிஸ் புகார் கொடுத்தார் சாந்தி. அதில், எனது சகவீரர் ராஜன் என்னை சாதிய மற்றும் பாலியல் ரீதியாக இழிவுப்படுத்துகிறார்.
நான் கழிவறைக்குள் சென்றால் சத்தமாக, அந்த ஆணை வெளியில் அனுப்புங்கள் என கத்துவார்.
மற்ற மாணவர்களிடம் என் மீது பாலியல் புகார் அளிக்க வற்புறுத்துவார் என கூறியிருந்தார்.
ஆனால் இந்த மனு மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது குறித்து கண்ணீருடன் பேசிய சாந்தி, என்னை எங்காவது பயிற்சியாளராக நியமிக்க அரசை கையெடுத்து கேட்கிறேன், இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களை தயார்படுத்த என்னை அனுமதியுங்கள் என கூறியுள்ளார்.

சாதனை தமிழச்சியின் கண்ணீர் கதை
Reviewed by Author
on
October 27, 2018
Rating:
No comments:
Post a Comment