சர்க்கரை நோயாளிகள் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து சாப்பிடுங்கள்: நன்மைகள் ஏராளம் -
இத்தகைய வெந்தயத்தை இரவில் முழுவதும் நீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு அந்நீரை குடித்து வந்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
நன்மைகள்
- வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து நம் உடலின் சர்க்கரை அளவை சீராக்குவதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.
- வெந்தயத்தில் பொட்டாசியம் இருப்பதால், ரத்தத்தையும், இருதய துடிப்பும் கட்டுக்குள் வைப்பதுடன், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை ரத்தில் குறைக்கிறது.
- நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணக் கோளாறுகள், ரத்தச்சோகை போன்ற பிரச்சனைகளை குணமாக்க வெந்தயத்தை முளைக்க வைத்து சாப்பிடலாம்.
- வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் அரை மணிநேரம் தடவி வர, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகப்பருக்கள், சுருக்கங்கள் போன்றவற்றை நீங்கும்.
- வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலைமுடியின் அடிக்கால்களில் தடவி 30 நிமிடம் கழித்து குளித்தால் பொடுகு, முடி உதிர்வது குறையும்.
- மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் உடல் உபாதைகள் மற்றும் பெண்களுக்கு சாதாரணமாக ஏற்படும் இரும்புச்சத்து கோளாறு போன்ற பிரச்சனைகளை வெந்தயம் குணமாக்குகிறது.
- சிறிது வெந்தயத்தை மென்று தின்றதும், 2 சிறிய வெங்காயத்தை மோரில் நறுக்கி போட்டு அதை சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.
- சிறிதளவு வெந்தயத்துடன் 2 வெற்றிலையை சேர்த்து நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி, வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
- ஒரு துண்டு இஞ்சியுடன் சிறிதளவு வெந்தயத்தை அரைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள பித்தம் விலகும்.
- உணவில் வெந்தயம் அடிக்கடி சேர்த்து வந்தால் மலச்சிக்கல் வராது. அதுவே 1 டம்ளர் மோரில் வெந்தயம், சீரகப்பொடி கலந்து குடித்தால் வாய்வு தொல்லை நீங்கும்.
சர்க்கரை நோயாளிகள் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து சாப்பிடுங்கள்: நன்மைகள் ஏராளம் -
Reviewed by Author
on
October 27, 2018
Rating:
No comments:
Post a Comment