வங்காலை ஆனாள் ம.வி பாடசாலையில் இடம் பெற்ற போசனைக் கண்காட்சி-படங்கள்
நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வங்காலை புனித ஆனாள் மகா வித்தியாலய பாடசாலையில் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் வேல்ட் விசன் நிறுவனத்தின் அனுசரனையுடன் 24-10-2018 புதன் கிழமைகாலை போசனைக் கண்காட்சி இடம் பெற்றது.
குறித்த கண் காட்சியின் போது இளம் வயதினோருக்கான பராமரிப்பு, கர்ப்பம் தரித்தல் தொடக்கம் குழந்தை பிறந்து 5 வயது வரையான பூரண சுகாதாரம், சுற்றுச் சூழல் சுகாதாரமும் நுளம்புக் கட்டுப்பாடு, கழிவு முகாமைத்துவம்,உள நலம்,பற்சுகாதாரம் போன்ற பல்வேறு பயனுள்ள விடயங்கள் குறித்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.
மேலும் குறித்த கண்காட்சியுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாவட்ட கேன் அமைப்பினால், புற்று நோய் மற்றும் எயிட்ஸ் தொடர்பான பூரண மருத்துவ பரிசோதனை முகாமும் இடம் பெற்றது.
குறித்த மருத்துவ முகாமில் வங்காலை பிரதேச மக்கள் சுமார் 400 பேர் வரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
வங்காலை ஆனாள் ம.வி பாடசாலையில் இடம் பெற்ற போசனைக் கண்காட்சி-படங்கள்
Reviewed by Author
on
October 25, 2018
Rating:

No comments:
Post a Comment