இலங்கையில் எங்கு அதிகளவில் உணவு விரயமாகின்றது தெரியுமா?
இலங்கையில் எங்கு மிக அதிகளவில் உணவு விரயமாகின்றது என்பது பற்றிய தகவலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அம்பலப்படுத்தியுள்ளார்.
உலக உணவு தினத்தை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில், “எமது நாட்டில் மிகவும் அதிகளில் உணவு விரயமாகும் இடமாக நாடாளுமன்றம் காணப்படுகின்றது. இந்த விடயம் நாம் அனைவருக்கும் தெரிந்தது ஒன்றேயாகும்.
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்வுகளில் பங்கேற்பதில்லை. அவ்வாறு பங்கேற்றாலம் நாடாளுமன்ற உணவக உணவுகளை சாப்பிடுவதில்லை. நாடாளுமன்றில் பாரியளவில் உணவு வகைகள் விரயமாகின்றன.
27 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காரணத்தினாலும், தற்பொழுதும் அடிக்கடி சென்று வருவதனாலும் எனக்கு இந்த விடயம் நன்றாகத் தெரியும்” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எங்கு அதிகளவில் உணவு விரயமாகின்றது தெரியுமா?
Reviewed by Author
on
October 17, 2018
Rating:

No comments:
Post a Comment