அண்மைய செய்திகள்

recent
-

உலகின் மிகப் பழமையான கப்பல் சிதைவு கண்டுபிடிப்பு


கருங்கடலில், 2 கிலோமீற்றர் ஆழத்தில் மிகப் பழமையான கப்பல் மூழ்கிக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது சுமார் 2,400 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய கிரேக்க வாணிகக் கப்பல் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அந்தக் கப்பலின் பாகங்கள் அதிகம் சிதைந்து போகாமல், அதன் உண்மையான வடிவிலேயே இருந்துள்ளது.

எண்ணெய், எரிவாயு இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பதற்காகக் கடற்படுகையை ஆராயும் சிறப்புக் கேமராவைப் பயன்படுத்தி, உடைந்த 60 கப்பல்களைத் தேடும் பணி கருங்கடலில் நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக இந்தக் கப்பலை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கப்பலின் ஒரு பகுதியைக் கரிமக் காலச் சோதனைக்கு உட்படுத்தியதில், அது உலகின் மிகப் பழைய கப்பல் என்பது தெரியவந்தது. பக்கவாட்டில் சரிந்தவாறு கிடக்கும் கப்பலின் பாய்மரமும் சுக்கானும்கூட தற்போது அப்படியே உள்ளன. 2 கிலோமீற்றர் ஆழத்தில், கடலில் ஒட்சிசன் இருக்காது என்பதால், மரத்தால் ஆன கப்பல் மட்கிப் போகவில்லை. பழங்காலத்தில் கப்பல் கட்டுமானம் எப்படி இருந்தது,

கப்பல் பயணம் எப்படி இருந்தது என்பன போன்ற விபரங்களைப் புரிந்துகொள்ள, இந்தக் கண்டுபிடிப்பு மிக உதவியாக இருக்குமென ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
உலகின் மிகப் பழமையான கப்பல் சிதைவு கண்டுபிடிப்பு Reviewed by Author on October 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.