200 கோடி! மனைவியை விவாகரத்து செய்ய பிரபல தொழிலதிபர் எடுத்த அதிரடி
இந்தியாவில் பல ஆண்டுகளாக கெடிலா பார்மசூட்டிகல்ஸ் என்ற நிறுவனம் மருத்துவ உலகில் பிரபலமாக இருந்து வரும் உற்பத்தி நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்தின் உரிமையாளர் தான் ராஜிவ்மோடி. இவருக்கு மோனிகா என்ற மனைவி உள்ளார்.
இந்நிலையில் ராஜிவ்மோடிக்கும், மோனிகாவுக்கும் மோனிகாவுக்கும் அடிக்கடி குடும்பத்தில் கடும் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இதனால் இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியிருந்தனர். நீதிமன்றமும் விவாகரத்து வழங்கியது.
இதற்காக உள்ள 6 மாதகால கட்டாய பிரிவு காலத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏனெனில் இருவரும் 2012 ஆண்டு முதலே தனியாக வாழ்ந்து வருவதன் காரணமாகவே தள்ளுபடி செய்ததாக கூறப்படுகிறது.
ராஜிவ் மோடி, அடித்துத் துன்புறுத்தியதாக மோனிகா புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து இருவரையும் காவல்நிலையத்தில் மூத்த வழக்கறிஞர்கள் காவல் உயரதிகாரிகள் கவுன்சிலிங் அளித்தனர்.
6 மணி நேர கவுன்சிலிங்குக்குப் பிறகு இருவரும் விவாகரத்துக்கு ஒப்புக் கொண்டதால், மனைவி மோனிகா, அதிபர் ராஜிவ் மோடி மீது கிரிமினல் புகார் அளிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தார்.
மனைவியை விவாகரத்து செய்ய 200 கோடி ரூபாய் அவருக்கு கொடுக்க வேண்டும் என்ற முடிவு எட்டப்பட இதற்கான டிமாண்ட் டிராப்ட்டை ராஜிவ் மோடி மோனிகாவிடம் அளித்தார்.
இதில் இந்த தம்பதிக்கு மகன் இருப்பதால், அவர் யாருடன் இருக்கப் போகிறார் என்ற கேள்வி நிலவியது. ராஜிவ்மோடி தன் மகன் தன்னிடம் தான் இருக்க வேண்டும் என்று கூறியதால், மோனிகா மகன் தந்தையிடமே வளரட்டும் என்று விட்டுக் கொடுத்துள்ளார்.
மேலும் ஒரு பிரபல மருந்து உற்பத்தி நிறுவன தொழிலதிபரே தன் மனைவி மீது குடும்ப வன்முறையைச் செலுத்தி விவாகரத்துக்காக 200 கோடி ரூபாய் கொடுத்தது சமூக ஆர்வலர்கள், பெண்ணியவாதிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
200 கோடி! மனைவியை விவாகரத்து செய்ய பிரபல தொழிலதிபர் எடுத்த அதிரடி
Reviewed by Author
on
November 01, 2018
Rating:
No comments:
Post a Comment