50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 39 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு-படங்கள்
தலைமன்னார் கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 கிலோ கிராம் எடை கொண்ட 'கேரள கஞ்சா' பொதிகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்டுள்ள 'கேரள கஞ்சா' பொதிகளின் பெறுமதி சுமார் 50 இலட்சம் ரூபாய் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடற்படை அதிகாரிகள் சிலர் தலைமன்னார் கடற்கரை பகுதியில் ரோர்ந்து சென்ற வேளை கரைக்கு அருகில் வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.
குறித்த கஞ்சா பொதிகள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட 39 கிலோ கிராம் எடை கொண்ட கஞ்சா பொதிகளை கடற்படையினர், தலைமன்னார் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைப்பற்றப்பட்டுள்ள 'கேரள கஞ்சா' பொதிகளின் பெறுமதி சுமார் 50 இலட்சம் ரூபாய் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடற்படை அதிகாரிகள் சிலர் தலைமன்னார் கடற்கரை பகுதியில் ரோர்ந்து சென்ற வேளை கரைக்கு அருகில் வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.
குறித்த கஞ்சா பொதிகள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட 39 கிலோ கிராம் எடை கொண்ட கஞ்சா பொதிகளை கடற்படையினர், தலைமன்னார் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 39 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு-படங்கள்
Reviewed by Author
on
November 12, 2018
Rating:

No comments:
Post a Comment