வட மாகாண கல்வித்திணைக்களத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளராக(விளையாட்டு)பதவியுயர்வு
மன்னார் கல்வி வலயத்தில் உதவிக்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றிக்கொண்டிருந்த திரு ப.ஞானராஜ் என்பவர் 01.11.2018 முதல் வட மாகாண கல்வித்திணைக்களத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளராக (விளையாட்டு) பதவியுயர்வு பெற்றுள்ளார். வட மாகாண கல்விச்செயலாளரினால் இவருக்கு இப்பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இவர் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கல்வி பயின்று வவுனியா கல்வியியற்கல்லூரியில் பயிற்சி பெற்று மீண்டும் 1998ம் ஆண்டு முதல் 2014வரை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில்; ஆசிரியராக கடமையாற்றி இக்கல்லூரி தேசிய மட்டத்தில் உதைபந்தாட்டத்தில் 13 முதலிடங்களையும் 6 இரண்டாமிடங்களையும் 14 மூன்றாமிடங்களையும் பெற்றதோடு 2004ம் ஆண்டில் சர்வதேச போட்டியில் இக்கல்லூரி தென்கொரியா சென்று 4ம் இடத்தையும் பெற்று பெருமை தேடிக்கொடுத்தார்.
இவர் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் கவுண்சில் உறுப்பினராகவும் மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் செயலாளராகவும் ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அங்கீகாரம் பெற்ற பயிற்றுவிப்பாளராகவும் தரம் 2 உதைபந்தாட்ட நடுவராகவும்
சர்வதேச மெய்வல்லுநர் சங்கத்தின் அங்கீகாரம் பெற்ற தரம் 1 பயிற்றுவிப்பாளராகவும்
தரம் 3 மெய்வல்லுநர் நடுவராகவும் சமாதான நீதவானாகவும் சேவையாற்றுகின்றார்.
இவர் இலங்கை கனிஸ்ட தேசிய உதைபந்தாட்ட அணியின் தலைமைப்பயிற்றுவிப்பாளராக 2004ல் தென்கொரியா - 2013இல் ஈரான் ஆகிய நாடுகளுக்கு சென்று இலங்கைக்கு பெருமை சேர்த்தவர்.
அத்துடன் மெய்வல்லுநர் பயிற்சி (கேரளா) தலைமைத்துவ பயிற்சி (சிங்கப்பூர்) உதைபந்தாட்ட பயிற்சி (மலேசியா) ஆகிய வெளிநாட்டு பயிற்சிகளையும் பெற்றுள்ளார்.
2013ல் நடைபெற்ற இலங்கை கல்வி நிர்வாக சேவை பரீட்சையில் இவர் சித்தியடைந்து 2015.02.01 முதல் உதவிக்கல்விப்பணிப்பாளராக மன்னார் கல்வி வலயத்தில் பணியாற்றி வரலாற்றில் முதல் தடவையாக வட மாகாணத்தில் மன்னார் கல்வி வலயம் முதன் முறையாக 2018ல் 1ம் இடம் பெற உழைத்தவர்.
மேலும் இவர் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி அணிக்கும் மாந்தை சென் லூட்ஸ் விளையாட்டுக்கழகத்திற்கும் மன்னார் கிறீன் பீல்ட் விளையாட்டுக்கழகத்திற்கும் மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட அணிக்கும் விளையாடிய சிறந்த உதைபந்தாட்ட வீரராவார்.
இவர் மாதோட்ட துறையாம் மாந்தையை பிறப்பிடமாக கொண்ட திரு திருமதி செல்வம் ஜெயசோதி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வராவார். இவரது பணி சிறக்கவும் வட மாகாணம் மேலும் விளையாட்டுத்துறையில் முன்னேறவும் இறையாசீர் வேண்டி வாழ்த்துகின்றோம். இவர் தனது புதிய பணிப்பொறுப்பை 05.11.2018 திங்கள் பொறுப்பேற்கின்றார். மன்னார் மாவட்டம் இவரால் பெருமயடைகிறது. இவருக்கு எமது மாவட்டம் சார்ந்த வாழ்த்துக்கள்.
"நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக நாமும் வாழ்த்துகின்றோம்"
தகவல் - மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்
தொகுப்பு வை.கஜேந்திரன்-
வட மாகாண கல்வித்திணைக்களத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளராக(விளையாட்டு)பதவியுயர்வு
Reviewed by Author
on
November 01, 2018
Rating:

No comments:
Post a Comment