கூட்டாட்சி மற்றும் வடக்கு, கிழக்கு இணைப்பு என்பன நான் உயிரோடு இருக்கும் வரையில் நடக்காது என்று ஒருபோதும் கூறவில்லை – ஜனாதிபதி
கூட்டாட்சி அரசமைப்பு மற்றும் வடக்கு, கிழக்கு இணைப்பு என்பன நான் உயிரோடு இருக்கும் வரையில் நடக்காது என்று ஒருபோதும் கூறவில்லை. நான் அவ்வாறு தெரிவிக்கவில்லை என்பதைப் பொது மேடையில் விரைவில் அறிவிப்பேன். இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்றுச் சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பு ஆரம்பித்து 15 நிமிடங்களின் பின்னர் வடக்கு மாகாண ஆளுநர் குரேவுக்கும் இதில் பங்கேற்றுள்ளார்.
கூட்டு அரசு தொடரவேண்டும் என்பதே கூட்டமைப்பின் விருப்பம் என்று சம்பந்தன் கூறியுள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு கூட்டு அரசாலேயே தீர்வு காண முடியும் என்று சம்பந்தன் அழுத்தித் தெரிவித்துள்ளார்.
இதன்போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கூட்டாட்சி அரசமைப்பு மற்றும் வடகிழக்கு இணைப்பு என்பனவற்றுக்கு நான் உயிரோடு இருக்கும் வரையில் இடமளிக்கப் போவதில்லை என்று நீங்கள் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, நானும் அந்தச் செய்திகளைப் பார்த்தேன். நான் அப்படி எதுவும் சொல்லவில்லை. அன்று நடந்தது எங்கள் கட்சி அமைப்பாளர்களுடனான கூட்டம். அந்தக் கூட்டத்தில் பல விடயங்கள் ஆராயப்பட்டன. பேசப்பட்டன. அது கலந்துரையாடலாகவே நடந்தது. அங்கு நான் இப்படியொன்றைச் சொல்லவில்லை.
இதனை விரைவில் பொதுமேடையில் அறிவிப்பேன் இதேவேளை, கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனை உருவி எடுத்து அவருக்கு பிரதி அமைச்சுப் பதவி வழங்கியமை தொடர்பில் கூட்டமைப்பினர் மைத்திரியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தனக்கு இது தொடர்பில் எதுவும் தெரியாது என்றும், ஆள் ஒருவரை தன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள் என்றும், அவருக்கு தான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தேன் என்றும் குறிப்பிட்ட மைத்திரி, இந்த நடவடிக்கை பிழையானது என்பதை ஒப்புக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். என்றார்.
கூட்டாட்சி மற்றும் வடக்கு, கிழக்கு இணைப்பு என்பன நான் உயிரோடு இருக்கும் வரையில் நடக்காது என்று ஒருபோதும் கூறவில்லை – ஜனாதிபதி
Reviewed by Author
on
November 09, 2018
Rating:

No comments:
Post a Comment