முல்லைத்தீவில் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு -
முல்லைத்தீவில் வறுமையை ஒழிப்போம் வாழவைப்போம் அமைப்பின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு - தேவிபுரத்தில், அமைப்பின் செயற்பாட்டாளர் முல்லை ஈசன் தலைமையில் இன்று இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த செயற்பாட்டாளர் முல்லை ஈசன், தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் எம் மறவர்களையும் அவர்களின் தியாகங்களையும் பூசிக்க வேண்டிய புனித நாளான தேசிய மாவீரர் நாளை உணர்வுடன் அனுஷ்டிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில், அருட்தந்தை எம்.நடராஜா சமூக ஆர்வலரும் மாவீரத் தியாகியின் மகனுமான எஸ்.ரி.பிரணீவ் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு தலா 5000 ரூபாய் பணமும், தென்னை மரக்கன்றும் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
முல்லைத்தீவில் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு -
Reviewed by Author
on
November 20, 2018
Rating:

No comments:
Post a Comment