உங்களின் மூச்சுக்குழாயில் சளி அடைக்காமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் -
இந்நோயினால் சுவாசிப்பதில் சிரமங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகக் காணப்படுகின்றது.மேலும் முச்சுக்குழாயில் அதிகபடியான சளி சேர்ந்தாலும் ஆஸ்துமா வர வாய்ப்பு உள்ளது.
மேலும் ஆஸ்துமா நோயிலிருந்து தப்பிக்க தினமும் என்ன உணவுகளை உண்ண வேண்டும் என தெரிந்து கொண்டு அதை தொடர்ந்து பின்பற்றுங்கள்.
ஃப்ரக்கோலி
ஃப்ரக்கோலியை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூச்சுத்திணறல் மற்றும் மூச்சுக்குழாய் அடைப்பு போன்ற பிரச்சினைகளை சரிசெய்ய முடியும்.புதினா
புதினாஆஸ்துமாவால் கஷ்டப்படுகிறவர்களுக்கு மிகச்சிறந்த ஆறுதலையும் தீர்வையும் தருகிறது. மூச்சுக்குழாய் தொடர்புடைய பிரச்சினைக்கான மருந்துகளில் புதினாவின் எக்ஸ்ட்ராக்ட் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது.
அவகேடோ
அவகேடோவில் உள்ளடங்கியுள்ள குளுட்டாதையோன் செல்களில் உள்ள ஃப்ரீ ராடிக்கல்ஸை பாதுகாக்கிறது. அதோடு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றலும் கொண்டது.ஆப்பிள்
ஆப்பிளில் அதிக அளவிலான பயோ பிளவனாய்டுகள் இருக்கின்றன. அதனால் ஆப்பிள் ஆஸ்துமா நோயாளிகள் மற்றும் நோய் எதிர்ப்பு ஆற்றல் மற்றும் மூச்சுப் பிரச்சினைகளைத் தீர்க்கும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் பைரிடாக்சைல் அதிக அளவில் இருக்கிறது. அதோடு வைட்டமின் பி6 ம் நிரம்பியிருக்கிறது. குறிப்பாக, மூச்சுக்குழாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள தசைப்பகுதிக்கு வலிமையையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.இஞ்சி
இஞ்சியில் மிக அதிக அளவில் நோய் எதிர்ப்பு ஆற்றல் இருக்கிறது. அதனால் இஞ்சி அதிகமாக சேர்க்கப்பட்ட உணவுகளை உண்டு வந்தால் ஆஸ்துமாவில் இருந்து விரைவில் குணமாகலாம்.
ஸ்பின்னாக்
ஸ்பின்னாக் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் வைட்டமின்களும் நிறைந்திருக்கின்றன. ஆஸ்துமாவின் ஆபத்தையும் அதனால் உண்டாகும் சிரமங்களையும் எதிர்க்கும் ஆற்றல் ஸ்பின்னாக்கிற்கு இருக்கிறது.ரோஸ்மேரி
ரோஸ்மேரியில் நோய் எதிர்ப்பு ஆற்றலும் ஆண்டி ஆக்சிடண்ட்டுகளும் நிறைந்திருப்பதால் இவை மூச்சுக்குழாயை சுத்தப்படுத்துதல், ஆஸ்துமா ஆகியவற்றை குணப்படுத்த சிறந்த உணவாகும்.
உங்களின் மூச்சுக்குழாயில் சளி அடைக்காமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் -
Reviewed by Author
on
November 17, 2018
Rating:
No comments:
Post a Comment