விராட் கோஹ்லி, ரோஹித் ஷர்மாவை முந்திய மகளிர் அணி கேப்டன்!
மேற்கிந்திய தீவுகளில் மகளிர் டி20 உலகக் கிண்ண போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
பின்னர் 2வது போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் 56 ஓட்டங்கள் குவித்தார்.
அதன் பின்னர், அயர்லாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் மிதாலி ராஜ் 51 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்த போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், கடைசியாக மிதாலி ராஜ் அடித்த அரைசதத்தின் மூலம் டி20 போட்டியில் 2,283 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
இதன்மூலம் டி20 போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் மிதாலி ராஜ்.
அத்துடன் இந்திய வீரர்களான விராட் கோஹ்லி, ரோஹித் ஷர்மா, டோனி ஆகியோரையும் முந்தியுள்ளார். இதுவரை 85 போட்டிகளில் விளையாடியுள்ள மிதாலி ராஜ் 17 அரைசதங்களுடன் 2283 ஓட்டங்கள் குவித்துள்ளார். இவரது அதிகபட்சம் 97 ஆகும்.
ரோஹித் ஷர்மா 2207 ஓட்டங்களும், விராட் கோஹ்லி 2102 ஓட்டங்களும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோஹ்லி, ரோஹித் ஷர்மாவை முந்திய மகளிர் அணி கேப்டன்!
Reviewed by Author
on
November 17, 2018
Rating:
No comments:
Post a Comment