நாய்களின் மூலமாக மலேரியாவை கண்டுபிடிக்க முடியும்: விஞ்ஞானிகள் ஆச்சரியத் தகவல் -
கொசுக்களால் பரவக்கூடிய நோயான மலேரியாவுக்கு, ஆண்டுதோறும் 4 லட்சத்து 45 ஆயிரம் பேர் மரணம் அடைந்து வருவதாக ஆய்வுத் தகவல் கூறுகின்றது. இந்த நோயில் உள்ள சிக்கல் என்னவென்றால், ஒரு சிலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி எதுவும் இன்றி தாக்குகிறது.
எனினும், ரத்த பரிசோதனை மூலமாக இந்த நோய் தாக்கியுள்ளதா என்பதை கண்டறிய முடியும். இந்நிலையில், நாய்களின் மோப்ப சக்தி மூலமாகவும் மலேரியாவை கண்டறியலாம் என விஞ்ஞானிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஆய்வு கவுன்சில் இதற்கான ஆய்வை ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் மேற்கொண்டது. அப்போது 5 முதல் 14 வயது வரையிலான, நல்ல ஆரோக்கியத்துடன் கூடிய குழந்தைகளின் காலுறைகள் சேகரிக்கப்பட்டது.
அவை அனைத்தும் நாய்களிடம் மோப்ப சக்திக்கு வழங்கப்பட்டது. அதில் 70 சதவிதம் பேருக்கு மலேரியா நோய் இருப்பதை மோப்ப நாய்கள் கண்டுபிடித்தன.
எனவே, இந்த நோயை கண்டறிய நாய்களுக்கு மோப்ப சக்தி பயிற்சி அளிக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இதேபோல் புற்றுநோய்கள், நீரிழிவு நோயினால் ஏற்படும் கோமா போன்றவற்றையும் கண்டுபிடிக்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நாய்களின் மூலமாக மலேரியாவை கண்டுபிடிக்க முடியும்: விஞ்ஞானிகள் ஆச்சரியத் தகவல் -
Reviewed by Author
on
November 02, 2018
Rating:
Reviewed by Author
on
November 02, 2018
Rating:


No comments:
Post a Comment