மஹிந்தவிற்கு எதிராக கனடாவில் இருந்து ஒலிக்கும் ஈழத்தமிழரின் எதிர்ப்பு -
இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற ஆட்சிமாற்றம் மற்றும் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டமை குறித்து ஒண்டாரியோ மாகாணத்தின் முதல் தமிழ் பேசும் மாகாணசபை உறுப்பினர்களில் ஒருவரனான Scarborough-Rouge Park தொகுதியின் மாகாண சபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் செவ்வாய் கிழமை உரையாற்றினார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், மேலும் மஹிந்த ராஜபக்சவும் அவரது அரசாங்கமும் 2009 இல் மிகக்கொடூரமாக நடாத்திய தமிழர் மீதான இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்கள். இவர்களின் ஆட்சி காலத்தில் படுகொலைகள், கற்பழிப்புகள், சித்திரவதைகள், கடத்தல்கள், அங்கவீனம், மனஉளைச்சல், இலட்சகணக்கான அப்பாவி தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதனையும் மாகாணசபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நியமனம், தமிழர்களுக்கான நீதி மற்றும் சமாதானம் என்பவற்றை தொடர்ந்தும் தாமதமாக்கி விடும், சர்வதேச சமூகம் தொடர்ந்தும் இதை அனுமதிக்க கூடாது என்றும் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தமை, போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக ஒரு சுயாதீனமான மற்றும் சர்வதேச பொறிமுறையை நிறுவி நடைமுறை படுத்த வேண்டும் என எமது மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கனேடிய மத்திய அரசாங்கம் தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளை தீர்க்கும் ஒரு அரசியல் தீர்வை வழங்குவதற்காக பரந்த சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மஹிந்தவிற்கு எதிராக கனடாவில் இருந்து ஒலிக்கும் ஈழத்தமிழரின் எதிர்ப்பு -
Reviewed by Author
on
November 02, 2018
Rating:

No comments:
Post a Comment