அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பெய்து வரும் மழையினால் காலபோகம் விதைப்பு அழியும் தருவாயில்-எம்.எஸ்.சில்வா

மன்னார் பகுதியில் பெய்து வருகின்ற மழை காரணமாக இப் பகுதியில் காலபோக விவசாய செய்கைக்காக மேற்கொள்ளப்பட்ட விதைப்புக்கள் அழியும் தருவாயில் சென்றுள்ளதாக மன்னார்  கட்டுக்கரைக்குளத்தின் திட்ட முகாமைத்துவக் குழுத் தலைவர் எம்.எஸ்.சில்வா தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் வருடத்தில் இருமுறை
மேற்கொள்ளப்படும் விவசாய செய்கைக்கு முன் மன்னார் அரசாங்க அதிபர்
தலைமையின் கீழ் விவசாய அமைப்புக்கள், விவசாயிகள்,; நீர்பாசன மற்றும்
விவசாய திணைக்கள அதிகாரிகள் கொண்ட குழுக்களின் ஆலோசனையின் பிரகாரமே சிறுபோகமோ அல்லது பெரும்போக நெற் செய்கை பண்ணுவது வழமையாகும்.

இதற்கிணங்க மன்னார் மாவட்டத்தில் பிரதான குளமாகிய கட்டுக்கரைக் குளத்தின் கீழ் 2018/2019 ஆண்டுக்கான காலபோகம் விவசாயம் செய்வதன் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சீ.ஏ.மோகன்ராஸ் தலைமையில் நடைபெற்ற விவசாயக் கூட்டத்தின் பிரகாரம் 24438 ஏக்கரில் நெற்செய்கை பண்ணுவது எனவும் 3, 3,1/2 மாத நெற் செய்கையின் இறுதி நாள் 13.11.2018 ஆக இருக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் மன்னார் விவசாயிகளில் ஐம்பது வீதமான விவசாயிகள் விதைப்பை மேற்கொண்டுள்ளபோதும் தற்பொழுது மன்னாரில் பெய்துவரும் மழை காரணமாக அழிவுக்கு உட்பட்டு வருவதாகவும் மன்னார்  கட்டுக்கரைக்குளத்தின் திட்ட முகாமைத்துவக் குழுத் தலைவர் எம்.எஸ்.சில்வா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் மன்னாரில் பெய்து வரும் மழை காரணமாக நெற் செய்கை மேற்கொள்ளக்கட்ட வயலுக்குள் தேங்கும் நீரை வெளியேற்றுவதில் பாரிய பிரச்சனைகளுக்கு விவசாயிகள் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

அதாவது தேவையற்ற நீர் வயலுக்குள் தேங்கியிருப்பதால் களைகள் அழுகிப்
போகும் நிலை உருவாகி வருகின்றது. அத்துடன் மழை பெய்துக் கொண்டிருப்பதால் பயிர்களுக்கு காலத்துக்கு காலம் தெளிக்க வேண்டிய களை நாசினிகளை தெளிக்க முடியாது விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இன்றைய நிலையில் பத்து பதினைந்து நாட்களுக்கு மழை பொய்க்குமாகில் விதைக்கப்பட்ட பயிர்களை தக்க வைக்க முடியும் எனவும் திட்டமிட்ட காலத்தில் விதைப்புக்களை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

மழை பெய்து கொண்டிருப்பதால் இன்னும் ஐம்பது வீதமான விவசாயிகள்
விதைப்பதில் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் தாங்கள் அரசாங்க
அதிபரைச் சந்தித்து விதைப்பு இறுதி நாள் 13.11.2018 ஆக இருந்தாலும் இவ்
இறுதி நாளை நீடித்து 30.11.2018 வரை நீடிக்கும்படி கோரியுள்ளோம் என
தெரிவித்தார்.

தற்பொழுது மன்னார் பகுதியிலுள்ள விவசாயிகளின் பிரதான குளமாகிய
கட்டுக்கரைக்குளம் நீர் நிரம்பி வான் பாய்ந்து இவ் நீர் கடலுக்குச்
செல்வதாகவும் இவ்வாறு இங்குள்ள அனைத்து சிறு குளங்களும்
நிரம்பியுள்ளதாகவும் தற்பொழுது இப்பகுதியிலுள்ள அனைத்து நீரும் வீணே
கடலுக்குச் செல்லும் நிலையே உருவாகியுள்ளது என மேலும் தெரிவித்தார்.

மன்னாரில் பெய்து வரும் மழையினால் காலபோகம் விதைப்பு அழியும் தருவாயில்-எம்.எஸ்.சில்வா Reviewed by Author on November 25, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.