இளவரசர் ஹரி மற்றும் மெர்க்கல் தம்பதிகள் குடியேறப்போகும் வீட்டின் சிறப்புகள் என்ன தெரியுமா?
இளவரசர் வில்லியமுடன் ஏற்பட்ட சிறு மனக்கசப்பு காரணமாக இளவரசர் ஹரி தமது கர்ப்பிணி மனைவியுடன் Frogmore இல்லத்தில் குடியேற உள்ளார்.
கடந்த 300 ஆண்டுகளாக பிரித்தானிய அரச குடும்பத்தினரின் ரகசிய குடியிருப்பாக கருதப்பட்ட Frogmore இல்லம், இனி இளவரசர் ஹரி மற்றும் மெர்க்கல் தம்பதியின் பெயரில் அறியப்பட உள்ளது.
இங்கேயே கர்ப்பிணியான மேகன் மெர்க்கல் தமது முதல் பிள்ளையை பெற்றெடுக்க உள்ளார்.

தற்போது பல மில்லியன் பவுண்டுகள் செலவிட்டு குறித்த இல்லத்தை மறு உருவாக்கம் நடைபெற்று வருகிறது.
மெர்க்கலின் பிரசவத்திற்கு முன்னர் அதாவது அடுத்த ஆண்டு துவக்கத்தில் இளவரசர் ஹரி மற்றும் மெர்க்கல் குறித்த இல்லத்தில் குடியேற உள்ளனர்.
இதனையடுத்து பாதுகாப்பு அம்சங்களையும் பலப்படுத்த நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
முதலில் இளவரசர் வில்லியம் தற்போது குடியிருக்கும் இல்லத்தின் அருகாமையில் குடியேறுவதாகவே இளவரசர் ஹரியின் திட்டமாக இருந்தது.

Frogmore இல்லமானது 10 படுக்கை அறைகள் கொண்டதும், உடற்பயிற்சி கூடம், யோகா கூடம் உள்ளிட்டவைகளை உள்ளடக்கியதாகும்.
கோடை காலத்தில் மகாராணியார் தங்கிச் செல்லும் வின்ட்சர் அரண்மனைக்கு அருகாமையிலேயே Frogmore இல்லம் அமைந்துள்ளது.
இதன் அருகாமையிலேயே இளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்க்கல் கடந்த மே மாதம் திருமணம் செய்துகொண்ட புனித ஜோர்ஜ் தேவாலயமும் அமைந்துள்ளது.
மகாராணி விக்டோரியாவின் தாயார் இந்த இல்லத்திலேயே சுமார் 20 ஆண்டுகள் குடியிருந்துள்ளார். அவர் பயன்படுத்திய முக்கிய பொருட்கள் அனைத்தும் இந்த இல்லத்திலேயே பாதுகாக்கப்படுகிறது.

இளவரசர் ஹரி மற்றும் மெர்க்கல் தம்பதிகள் குடியேறப்போகும் வீட்டின் சிறப்புகள் என்ன தெரியுமா?
 
        Reviewed by Author
        on 
        
November 24, 2018
 
        Rating: 
      

No comments:
Post a Comment