அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர விசேட மத்தியஸ்த சபைக்கான நியமனம் வழங்கி வைப்பு---படங்கள்

மன்னார் மாவட்டத்தில் காணி தொடர்பான பிணக்குகளை தீர்ப்பதற்கான மற்றும் ஆலோசனை வழங்குவதற்கான விசேட மத்தியஸ்த குழு அங்கத்தினருக்கான நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது

மன்னார் மாவட்டத்தில் ஏற்படும் காணி தொடர்பான மக்கள் பிரச்சினைகளை கையால்வதற்க்காக சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்ட குழு அங்கத்தவர்களுக்கான உத்தியோகபூர்வ நியமனங்கள் மற்றும் அவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மோகன்றாஸ் தலைமையில் நேற்றைய தினம் மாலை 3 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் மத்தியகஸ்த சபை ஆணைகுழுவின் ஆணையாளர்கள் அதிகாரிகள் மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள் மற்றும் 2018 ஆண்டுக்காண மன்னார் மாவட்ட ரீதியில் தெரிவு செய்யப்பட்ட  மத்தியஸ்த சபையின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

இவ் மத்தியஸ்த  சபையானது இனிவரும் நாட்களில் தொடர்சியாக காணி சம்மந்தப்பட்ட அனைத்து பிணக்குகள் தொடர்பாகவும் செயற்படவுள்ளதுடன் 3 வருட காலப்பகுதி வரை இவ் அமைப்பினுடைய செயற்பாட்டுக்காலம் என்பது குறிப்பிட தக்கது.








மன்னார் நகர விசேட மத்தியஸ்த சபைக்கான நியமனம் வழங்கி வைப்பு---படங்கள் Reviewed by Author on November 23, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.