ரணிலுடன் ஆட்சி செய்ய முடியாது! மைத்திரி உறுதி -
ரணில் விக்ரமசிங்கவுடன் ஆட்சி செய்ய முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது ஜனாதிபதி இவ்வாறு கூறியதாக, லக்ஸ்மன் யாபா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை விட்டு விலகுமாறு 15 பேரைக் கொண்ட சுதந்திரக் கட்சியின் குழுவினர் கோரியதாகவும், அதற்கு பதிலாக ஐக்கிய தேசியக் கட்சியை அரசாங்கத்தை விட்டு விலக்கியமை மகிழ்ச்சி அளிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுடன் ஆட்சி நடத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கட்சியை மறுசீரமைத்து அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி கூறியதாக, லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ரணிலுடன் ஆட்சி செய்ய முடியாது! மைத்திரி உறுதி -
Reviewed by Author
on
November 02, 2018
Rating:

No comments:
Post a Comment