ஆட்சியை கைப்பற்ற அரசியல் கைதிகளை வைத்து பேரம் பேசும் மைத்திரி! கூட்டமைப்பு தகவல்
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள விடயமானது ஆட்சியை கைப்பற்ற பேரம் பேசும் ஒரு விடயம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த மூன்று வருடங்களில் செய்ய முடியாததை இப்போது செய்ய முடியும் எனின் ஜனாதிபதி ஏன் அதை அப்போதே செய்யவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, தமிழ் மக்களின் நன்மைக்காக புதிய பிரதமர் மஹிந்தவை கடுமையாக எதிர்ப்போம் என்றும் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரான எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சியை கைப்பற்ற அரசியல் கைதிகளை வைத்து பேரம் பேசும் மைத்திரி! கூட்டமைப்பு தகவல்
Reviewed by Author
on
November 07, 2018
Rating:

No comments:
Post a Comment