பேசாலையில் மரித்த ஆன்மாக்களின் நினைவு நாள் அனுஸ்ரிப்பு-படங்கள்
மரித்த ஆன்மாக்களின் நினைவு நாள் இன்று வெள்ளிக்கிழமை 02-11-2018 நாட்டின் பல பாகங்களிலும் நினைவு கூறப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்திலும் மரித்த ஆன்மாக்களின் நினைவு நாள் நினைவு கூறப்பட்டுள்ளது.
பேசாலை புனித வெற்றி அன்னை கத்தோலிக்க சேமக்காலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை விசேட திருப்பலி அருட்தந்தை தேவராஜா கொடுதோர் மற்றும் உதவி பங்குத்தந்தை ஆகியோரினால் ஒப்புக் கொடுக்கப்பட்டது.
இன்று காலை 6 -15 மணிக்கு ஒப்பு கொடுக்கப்பட்ட விசேட திருப்பலியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மரித்த ஆன்மாக்களை நினைவு கூர்ந்தனர்.
இதே வேளை மன்னார் மாவட்டத்தில் மரித்த ஆன்மாக்கள் அடக்கம் செய்யப்பட்ட பல்வேறு அடக்கஸ்தளங்களில் நினைவு கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேசாலையில் மரித்த ஆன்மாக்களின் நினைவு நாள் அனுஸ்ரிப்பு-படங்கள்
Reviewed by Author
on
November 02, 2018
Rating:

No comments:
Post a Comment