அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு! ஐ.தே.கவை சேர்ந்தவர் பிரதமராகலாம் -
பொது தேர்தலுக்கு இணங்கினால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் காபந்து அரசாங்கம் ஒன்றை அமைக்க தயார் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்தவரையில் அது பொது தேர்தலுக்கு தயாரில்லை.
இந்த நிலையில் அந்த கட்சியை கூட்டாட்சி ஒன்றை அமைக்க வருமாறு அழைப்பு விடுக்கிறோம்.
ஏனைய கட்சிகளும் இந்த காபந்து அரசாங்கத்தில் பங்கேற்க முடியும். இந்த காபந்து அரசாங்கத்தின் கீழ் பொது தேர்தல் ஒன்றுக்கு செல்ல முடியும்.
குறித்த காபந்து அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது ஏனைய கட்சிகளோ பிரதமர் ஒருவரை நியமிக்க முடியும்.
எனினும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்க ஜனாதிபதி விருப்பம் கொண்டிருக்காமையால் வேறு ஒருவரை ஐ.தே.க பரிந்துரை செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு! ஐ.தே.கவை சேர்ந்தவர் பிரதமராகலாம் -
 
        Reviewed by Author
        on 
        
November 24, 2018
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
November 24, 2018
 
        Rating: 


No comments:
Post a Comment